பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்435

     (இ-ள்.)பொருப்பின்உம்-மலையைக்காட்டிலும்,வலிய-வலிமை பெற்ற,
கொற்றம்-வெற்றியைத்தருகின்ற, புயம் உடை-புயத்தையுடைய, வீமன்
என்றால்-வீமனானாலும்,-அரும்புஉடை-சுரக்குந் தன்மையையுடைய,
அறலின்-நீரிலேயுள்ள, நஞ்சம்-விஷம், அஞ்சும் ஓ-பயப்படுமோ?  ஆலம்
என்னும்-விஷமென்கிற, உருப்பினை-அஞ்சத்தக்கவெம்மையானபொருளை,
அறிந்துஉம்-தெரிந்திருந்தும்,-[அந்நீரில்நஞ்சமுள்ளதென்பதை
உணர்ந்திருந்தும்],-(வீமன்),-வாரிஉண்டு-அத்தண்ணீரைப் பருகி,
தன்உயிர்உம்-,-வீந்தான்-அழியப்பெற்றான்: சொல்லின்உம் -
(இவ்விஷயத்தைச்) சொன்னாலும்,(சொல்லுகிற நமக்கு), நெருப்பின் -
நெருப்பினால்வேவதுபோல, நா வேம் - (சொல்லுகின்ற) நாக்கும்
வெந்திடும்: நினைப்பின்உம்- (இந்நிகழ்ச்சியை) நினைத்தாலும்,
நெஞ்சம்வேம் - (நினைக்கின்ற)மனமும் வேகும்;(எ-று.)

    தண்ணீரில்லாக்காட்டில் நீதிநெறி தவறாதபாண்டவர்களில் தருமன்
சகதேவன் நகுலன் அருச்சுனன் வீமன் என்கிறஇவர் அலைச்சற்பட்டு
நீர்வேட்கை விஞ்சியதும், இவர்களில் சகதேவன்முதலியோர்
ஒவ்வொருத்தராய் நச்சுநீரை யுண்டுஉயிரொழிந்ததும் ஆகிய
இந்தச்செய்தியைச் சொல்லுதலும் நினைத்தலும்பெருந்துயரை
விளைக்குமென்று,கவி, தம்நிலையைக்கூறும்முகத்தால்
அப்பாண்டவர்களின் நிலையைவிளக்குகின்றாரென்க. அருப்புஉடை-
அருமையையுடைய என்பாருமுளர்.  அறலின்றாகமஞ்சுமோஎன்றும்
பாடம்.                                             (685)

32.-வீமன்முதலியநால்வரும் உயிரொடுங்க,
தருமன் தனிப்பட்டவனாதல்.

ஆருயிர்பொன்றுங்காலையமுதம்விடமாமென்று
பாருளோருரைக்குமாற்றம் பழுதறப் பலித்தகாலை
மாருதிமுதலாவுள்ள மன்னவர்நால்வர்தம்மோடு
ஓருயிரானமற்றை யொருவனேயொருவனானான்.

     (இ-ள்.)'ஆர்உயிர் - அருமையான உயிர், பொன்றும் காலை-
இறத்தற்குரிய சமயத்தில், அமுதம்உம் - அமிருதமும், விடம் ஆம்-
விஷம்ஆகும்,'என்று-,பார்உளோர் - பூமியிலிருப்பவர், உரைக்கும் -
கூறுகின்ற, மாற்றம் - சொல்லானது, பழுது அற - தவறுதலாகாதபடி, பலித்த
- பயனைவிளைத்த,காலை- இந்தப்போதில்,-மாருதிமுதல் ஆ உள்ள -
வாயுவின் குமாரனானவீமசேனனைமுதலாகவுடைய,மன்னவர்
நால்வர்தம்மோடு - ராஜகுமாரர்கள் நால்வரோடு, ஓர் உயிர் ஆன-
ஒரேஉயிராகவுள்ள, மற்றை ஒருவனே-எஞ்சி நின்ற தருமபுத்திரன் ஒருவனே,
ஒருவன் ஆனான்- தனிப்பட்டவனானான்;(எ-று.)

    முரலிரண்டடிகளால், சகதேவன் முதலிய மூவர்போலவேவீமசேனனும்
இறந்தானென்று குறிப்பித்தவாறு.  'மன்னவர்நால்வர்தம்மோடோருயிரான
மற்றையொருவன்'என்ற தொடர்-தருமபுத்திரன் தன் தம்பியரைத்
தன்னுயிர்போலக் கருதியிருந்தமையைத் தெரி