விக்கும். 'அளவுக்குமிஞ்சினால்அமுதமும் விஷமாம்'என்பதுபோல, 'ஆருயிர்பொன்றுங்காலைஅமுதமும் விடமாம்'என ஒரு லோக வசனமும் உண்டுபோலும். அமுதம் என்பது - தேவர்உணவாகிய சாவா மருந்து. நீரே உயிர்நீக்கும் விஷமாயிற்று என்க. (686) 33.-தருமபுத்திரன்சோகமும் தாகமும் விஞ்சிச் சோர்ந்துவிழுதல். கட்புலனாகவேறோருயிரையுங்காண்கலாத வெட்புலந்தன்னிற்சோக மிஞ்சவேதாகம்விஞ்சி உட்புலனழிந்துபின்போ முள்ளமோடுயங்கிவீழ்ந்தான் நட்புலந்தவரான்முன்னங் கானகநண்ணினானே. |
(இ-ள்.) நட்புஉலந்தவரால் - சிநேகத்தன்மை கெட்டவரான துரியோதனாதியரால்,முன்னம் - முன்பு, கானகம் -காட்டை, நண்ணினான்- அடைந்தவனாகியதருமபுத்திரன்,-(நீர்கொணரச்சென்ற தம்பியர் எவரும் மீண்டுவராமையால்), கண் புலன் ஆக வேறு ஓர் உயிரைஉம் காண்கலாத வெள் புலம்தன்னில் - கண்ணுக்கு விஷயமாக வேறு ஒரு பிராணியையும் காணமுடியாத வெளியானஇடத்தில், சோகம் மிஞ்ச-துன்பம் அதிகரிக்க, தாகம் விஞ்சி-தாகமும் அதிகரித்து, உள் புலன் அழிந்து - உள்ளே யிருக்கும் புலனாகியஅறிவு கெட்டு, பின் போம் - இனி அழியப்போகின்ற, உள்ளமோடு - மனத்துடனே, உயங்கி - தளர்ந்து, வீழ்ந்தான் - உயிரொடுங்கிவிழுந்தான்;(எ-று.) போனதம்பியர்எவரும் வராமையாலும், அன்னார்க்குநிகழ்ந்த நிகழ்ச்சியைக் கண்டு வந்துசொல்ல ஒருவரையும் காணாமையாலும், வெட்டவெளியான அந்தக்காட்டில், தருமபுத்திரனுக்குச் சோகத்தோடு தாகமும் விஞ்சி உட்புலனொடுங்கித்தளர்ந்துவீழ்ந்தா னென்க. உட்புலனழிந்தால் பின்புஉள்ளமும்போம் ஆதலால், 'உட்புலனழிந்தபின் போம்உள்ளமும்'என்றது. துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர் காட்டையடைந்தமை, வெளிப்படை. (687) 34.-வேள்வியில்தோன்றிய பூதம் தான் செய்யவேண்டிய பணியைக் கூறுமாறுகாளமாமுனியைக் கேட்டல். ஈங்கிவருயங்கிவீந்தவெல்லையிலெரிசெய்யோமத்து ஆங்கவணெழுந்தபூத மம்முனிதன்னைநோக்கிப் பாங்குடன்புரியுமேவல் பணித்தருளென்னநெஞ்சில் தீங்கிலாமுனியும்பூத வரசுடன்செப்புவானே. |
(இ-ள்.) ஈங்கு- இவ்விடத்தில், இவர் - இந்தபாண்டவர், உயங்கி - உயிர் சோர்ந்து, வீந்த - அழிந்த, எல்லையில்-சமயத்தில்,-ஆங்கு - (துரியோதனனுள்ள) அவ்விடத்தில், அவண்-அப்போது, எரி செய் ஓமத்து [ஓமம்செய் எரியத்து]-ஓமஞ்செய்கின்றஅக்கினியினின்றும், எழுந்த - கிளம்பிய, பூதம் - பூதமானது,-அமுனி தன்னைநோக்கி - அந்தக்காளமாமுனியைப் பார்த்து, 'பாங்குடன்- |