பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்437

இனிதாக, புரியும் -(நான்) செய்யவேண்டிய, ஏவல் - கட்டளையை,
பணித்தருள்-சொல்லியருள்வாய்,'என்ன-என்று கேட்க-,இநெஞ்சில்தீங்கு
இலா முனிஉம் - மனத்திற்குற்றதில்லாத அந்தக் காளமாமுனிவனும், பூதம்
அரசுடன்-(வேள்வித்தீயினின்றும் தோன்றிய) அந்தப்பூதராசனுடனே,
செப்புவான் - (பின்வருமாறு) கூறுபவனானான்;(எ-று.)-காளமாமுனிவன்
செப்பியதை மேற்கவியிற் காண்க. பாண்டவரின் நிலையையறியாதமுனிவ
னென்பார் 'நெஞ்சிற்றீங்கிலாமுனி'என்றார்.                  (688)

35.-காளமாமுனிவன்கட்டளையிடப்பூதம்கேட்டல்.

நின்றிடாதிமைப்பிற்குந்தி மைந்தராய்நெடியகானில்
துன்றிடாவைகும்வேந்துந் துணைவருமிருந்தசூழல்
சென்றிடாவொன்றாயைந்துசெயற்கையாமுடலைச்சேரக்
கொன்றிடாவருதியென்று கூறியவுறுதிகேளா.

இதுவும்,அடுத்தகவியும் - குளகம்.

     (இ-ள்.)'நின்றிடாது-(இங்கே)தாமதித்துநில்லாமல், இமைப்பில் -
கண்ணிமைக்கும்நேரத்திற்குள், நெடிய கானில் - கொடியகாட்டிலே,
துன்றிடா-சேர்ந்து,-குந்திமைந்தர் ஆய் வைகும்-குந்தியின் புத்திரராய்
(அங்கு)த் தங்கியிருக்கின்ற, வேந்துஉம் - தருமபுத்திரராசனும், துணைவர்உம்
- அவன்தம்பியரான வீமன்முதலியோரும், இருந்த - வாழ்கிற, சூழல் -
இடத்திலே, சென்றிடா-போய், ஒன்று ஆய்-(உயிர்) ஒன்றாகி,ஐந்துசெயற்கை
ஆம்உடலை-ஐந்துசெயற்கையாகவுள்ளஉடலை,சேர - ஒருசேர,
கொன்றிடா-கொன்றிட்டு, வருதி-(மீண்டு) வருவாயாக,'என்று-,கூறிய-
சொல்லிய, உறுதி-உறுதியானசொல்லை,கேளா-கேட்டு,-(எ-று.)-"பூதம்
முனியை நோக்கி***எனத்தொழுதேகிற்றன்றே"என அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.

     ஒன்றாய்ஐந்து செயற்கையாம்உடல்-பஞ்சபாண்டவர்க்கும் உயிர்
ஒன்றேயாயினும் உடல்ஐந்தாகி யமைந்திருக்கின்றன என்றவாறு.

36.-பூதம்தன்துணிபை முனிவனிடங்கூறிவிட்டு,
முனிவன் கட்டளையைச்செய்யுமாறு செல்லுதல்.

ஐம்பெரும்பூதமொக்கு மப்பெரும்பூதஞ் சாதிச்
செம்பொனினொளிருமேனித்தெய்வமாமுனியைநோக்கி
வெம்புகானுறைவோரின்றென் விழிக்கிலக்கல்லரானால்
எம்பிரானினையேகொல்வனெனத்தொழுதேகிற்றன்றே.

    (இ - ள்.) ஐ பெருபூதம் ஒக்கும் - பஞ்சமஹா பூதங்களையொத்திருக்கி
[பெருந்தோற்றமுடைய], அ பெரு பூதம்-அந்தப் பெரிய பூதமானது, சாதி
செம்பொனின் ஒளிரும்-உயர்தரமானசெம்பொன் போல் விளங்குகின்ற,
மேனி-உடம்பையுடைய, தெய்வம் மா முனியை நோக்கி -
தெய்வத்தன்மையுள்ள (அந்தக்) காளமாமுனிவனைப்பார்த்து, 'வெம்பு கான்
உறைவோர் - பற்றியெரிகின்ற காட்டில் வசிப்பவரான பாண்டவர், இன்று-
இப்போது, என் விழிக்கு-என்