கண்ணுக்கு, இலக்குஅல்லர் ஆனால்- தென்படுகிறபொருளாக ஆகாமற்போனால்,எம்பிரான்-எமது தலைவனே! (நான்), நினைஏ கொல்வன் - உன்னையேகொல்வேன்,'என-என்று, தொழுது- கைகூப்பிவணங்கி, ஏகிற்று - (பாண்டவரை நாடிச்) சென்றது;(எ-று.)- அன்றே-ஈற்றசை;தேற்றமுமாம். அபிசாரவோமஞ்செய்து வேள்வியினின்று எழுப்பப்பட்டதாதலால் 'என்னாற்கொல்லப்படவேண்டியவர் கண்ணுக்கு அகப்படா விட்டால், என் வருகை வீணாகப்போகப்படாதாதலால் நான் உன்னையேகொல்வேன்' என்று அந்தப்பூதம் சொல்லிற் றென்க. பெருந்தோற்றமுடைமைபற்றி, ஐம்பெரும்பூதங்கள் வேள்விப்பூதத்திற்கு உவமையாயின. வலிமைபற்றிவந்த உவமை யென்றலும் ஒன்று. சாதிச் செம்பொன்-மாற்றுயர்ந்த சிறந்த பொன். காளமாமுனிவன்மேனி தங்கம்போல் ஒளிர்கின்ற தென்க. இலக்கு-இங்கே, கண்ணுக்குப் புலனாகும்வஸ்து என்ற பொருளில் வந்தது. (690) 37.-பூதம்சென்று தருமபுத்திரனைக்காணுதல். காட்டுறுகோடைவெப்பங் களைகுவான்கரியமேகம் மோட்டுருக்கொண்டுமின்னான்முளைத்தெழுமெயிறுதாங்கித் தோட்டுணைப்புடைகொண்டெங்குஞ்சூறைபோன்மரங்கள்வீழ் காட்டுறைவாழ்க்கையானைக்கண்ணுறக்கண்டதன்றே. [த்திக் |
(இ-ள்.) கரியமேகம் - கருநிறமுள்ள மேகமானது, காடு உறு - காட்டிலே பொருந்திய, கோடை வெப்பம் - வெயிலின் வெப்பத்தை, களைகுவான்- போக்கும்பொருட்டு, மோடு உரு கொண்டு - பருத்த உருவத்தைக் கொண்டு, மின்னால்முளைத்தஎழும் எயிறு தாங்கி - மின்னல்மயமாய் முளைத்துத்தோன்றியகோரப்பற்களைத்தாங்கி, தோள் துணைபுடைகொண்டு-இரண்டுதோள்களிலும் புடைத்தலைக்கொண்டு, எங்குஉம் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி-எல்லாவிடத்திலும் பெருங்காற்றுப்போல மரங்களைவிழச்செய்துகொண்டு, காடு உறை வாழ்க்கையானை- காட்டிலேவாழ்கின்ற வாழ்க்கையை யுடையவனாகிய தருமபுத்திரனை,கண்-கண்களினால்,உற கண்டது-பொருந்தப் பார்த்தது; (எ-று.)-அன்றே-ஈற்றசை. பூதத்தை,மேகமாகஉருவகஞ்செய்தார். காட்டிலே கருநிறமுள்ள பூதம் விளங்கும் எயிறுகளைத்தாங்கியவாறு தோள்களைத்தட்டிக் கொண்டு மரங்களைவீழ்த்தியவண்ணஞ் சென்றது, கரியமேகம் மின்னலைத்தாங்கி இடியிடித்துப் புயற்காற்றால்மரங்களைவீழ்த்தியவண்ணம் வந்ததுபோலு மெனக் கருத்துக் காண்க. உருவகவணியை அங்கமாகக்கொண்டுவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி: இங்ஙனம், வேள்வியிலெழுந்த பூதத்தைக் கரியமேகமாக உருவகஞ்செய்தற்குக் காரணங் கூறுவார் 'காட்டுறுகோடை வெப்பங் களைகுவான்'என்றார். துரியோதனனேவலால் கானகத்துப் பாண்டவர்க்கு நேரவிருந்தகொடுமையை இப்பூதம் போக்கியது காண்க. கோடை - குடக்குஎன்ற பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர். முதுவேனிலில் கோடைக்காற்று [=மேல்காற்று]வீசுத |