சுனைக்கரையில்,வீமன்முதலிய நால்வரும் ஒருசேர இறந்து வீழ்ந்துகிடத்தலைக்கண்டதனால்,பூதம், அங்குள்ள சுனைநச்சுச்சுனை என்றும், அந்நீரைப்பருகியதனால்வீமன்முதலிய நால்வரும் இறந்திருக்க வேண்டும்என்றும் கருதிற்றென்க. இங்ஙனம் நச்சுநீரைப் பருகி வீமன்முதலிய நால்வர் இறந்தமைக்குக் காரணம் தெரியாமையால், 'என்னினைந்துஏதுசெய்தார்'என்றது,அப்பூதம். மனத்திற்கு விருப்பந்தராதசெயலைக்கண்டவிடத்து, 'கெட்டேன்'என்று சொல்வது ஒரு சொல்விழுக்காடு:இச்சொல்-அதிசயத்தோடு இரக்கத்தையும் காட்டும்: "கேளாராயர்குலத்தவரிப்பழிகெட்டேன் வாழ்வில்லை"என்ற பெரியார்பாசுரத்தையுங் காண்க. பச்செனல்-குளிர்ந்திருத்தற் குறிப்பு. பங்கயம்=பங்கஜம்:சேற்றில்முளைப்பதுஎனத் தாமரைக்குக் காரணவிடுகுறி. 'சுனையும்'என்றஉம்மை, கதைப்போக்கைத் தழுவி வந்தது. நால்வரும், உம்மை-முற்றுப்பொருளது. மூன்றாம்மடியில்,சுனை-சுனைநீருக்கு, இலக்கணை. நிச்சயம், நிட்டூரம்=நிஸ்சயம், நிஷ்டூரம்என்ற வடசொற்களின் திரிபுகள். (694) 41.-பிறகு, பூதம்தன்னாற்கொல்லப்படவேண்டிய பாண்டவர் இறந்துவிட்டமையால், சினம்மூண்டு காளமாமுனிவனிடம்மீண்டுவருதல். காவலன்வார்த்தைகேட்டுக் காளமாமுனிவனென்னும் நாவலனோமத்தீயினம்மையுற்பவித்துவிட்டான் மேவலர்கொல்லும்முன்னே வீந்தனரிந்தப்பாவம் கேவலமல்லவென்று கிளர்சினமூண்டுமீண்டே. |
(இ-ள்.)காவலன் வார்த்தை கேட்டு - துரியோதனனுடைய வார்த்தையைக்கேட்டு, காளமாமுனிவன் என்னும் நாவலன்-காளமா முனிவனென்று சொல்லப்படுகிற புலவன், ஓமம் தீயின்-ஓமஞ்செய்யப்படுகிற வேள்வித்தீயினின்று, நம்மை உற்பவித்து-நம்மை உண்டாகச்செய்து, விட்டான்-அனுப்பினான்;(பாண்டவர்களோ), மேவலர் கொல்லும் முன்னே- பகைவர் கொல்லுதற்குமுன்னமே, வீந்தனர்-இறந்தார்:இந்த பாவம் - (குற்றமற்றவரைக் கொல்லவேண்டு மென்றுசெய்த) இந்தப்பாவச்செயல், கேவலம் அல்ல - சாமானியமானதன்று, என்று-என்று எண்ணி, கிளர் சினம் மூண்டு - பொங்கும்சினம் மூளப்பெற்று, மீண்டு - (காளமாமுனிவனிடம்) திரும்பிச் சென்று,-(எ-று.)-இந்தச்செய்யுளிலுள்ள 'மீண்டு'என்ற இறந்த காலவினையெச்சம்,மேல் 44-ஆம் கவியிலுள்ள "என்று"என்பதனோடு இயையும். வேதம்வல்லவனாதலால்,காளமாமுனிவன் 'நாவலன்'எனப்பட்டான். கொடியஒருவனது சொல்லைக்கேட்டுப் பிறரைக்கொல்லுமாறு அபிசாரவோமஞ்செய்வது கொடிய தீவினையேயாகுமாதலால்,பூதம் 'இந்தப்பாவம்கேவலமல்ல'என்று கூறிற்று. இங்ஙனம் தீச் செயலைச்செய்தானென்பதுபற்றியே,அந்தப்பூதம் முனிவனிடம் கிளர்சினம் மூண்டது. (695) |