பக்கம் எண் :

442பாரதம்ஆரணிய பருவம்

42.-இரண்டுகவிகள்-பூதம்காளமாமுனிவனைக்கடிந்து
கூறுதலைக்தெரிவிக்கும்.

காலங்கண்மூன்றுமெண்ணுங் கடவுணீகலக்கமெய்தி
ஞாலங்கொணசையினில்லா நயனிதன்மகன்சொற்கேட்டுச்
சீலங்கொள்வாய்மையாய்செந் தீயெழுகானிற்சின்னீர்
ஆலங்கொல்பான்மையாரை யார்கொல்வானருளிச்செய்தாய்.

மூன்றுகவிகள் -ஒருதொடர்.

     (இ - ள்.)சீலம் கொள் வாய்மையாய் - நல்லொழுக்கத்தைக்
கொண்டுள்ள சத்தியமுடையவனே! இல்லா நயனிதன் - இல்லாத
கண்களையுடையவனாகிய [கண்ணில்லாதவனாகிய]திருதராஷ்டரனுடைய,
மகன் - மகனாகியதுரியோதனன்,ஞாலம் கொள் நசையின்-
பூமியைக்கொள்ளவேணும் என்கிற விருப்பத்தினாற் கூறிய, சொல்-சொல்லை,
கேட்டு - செவியேற்று, காலங்கள் மூன்றுஉம் - (இறப்பு எதிர்வு நிகழ்வு
என்னும்)மூன்றுகாலங்களிலும் நிகழும் வரலாறுகளையும்,எண்ணும்-
ஆராய்ந்து அறியவல்ல, கடவுள்-தெய்வத்தன்மையுடையவனாகிய,நீ-,
கலக்கம் எய்தி-கலக்கமடைந்து, செம் தீ எழுகானில் - செந்நிறமுள்ள
நெருப்புப்பற்றியெரிகின்றகாட்டிலே, சில் நீர் ஆலம்-சிறிதாகிய
நீரில்[சுனையில்]கலந்துள்ளவிஷத்தினால்,கொல்-கொல்லப்பட்ட,
பான்மையாரை-தன்மையையுடையபாண்டவர்களை,யார்கொல்வான்
அருளிச்செய்தாய் - யாரைக் கொல்லும்படி கூறியருளினாய்-?(எ-று.)

     'எவரையாவதுகொல்லும்படி ஏவினால்,அங்ஙனம் ஏவப்பட்டவர்
கிடைக்காவிடின், ஏவியவரையே கொல்லுந்தன்மையுள்ள என் போல்வாரை
இறந்தவரைக்கொல்லும்படி நீ ஏவி அனுப்பியது தகுதியன்று'என்ற
கருத்தினால்,'ஆலங்கொல்பான்மையாரையார் கொல்வான்
அருளிச்செய்தாய்'என்றது.  'நீமூன்றுகாலவரலாறுகளையும்
அறிபவனாயிருந்தும்,என்னைஏவுதற்கு முன்னே 'பாண்டவர்கள்எவ்வாறு
உள்ளார்கள்?'என்று ஆராய்ந்துபாராமல் துரியோதனன்பேச்சைக் கேட்டுப்
புத்திகலங்கினாய்'என்பதைப் புலப்படுத்த, 'காலங்கண்மூன்றுமெண்ணுங்
கடவுணீ இல்லாநயனி தன் மகன் சொற்கேட்டுக் கலக்கமெய்தி'என்றது.
ஐவரில் நால்வர் நஞ்சு நீரைப்பருகி யிறந்ததனால்,பெரும்பான்மைபற்றி
'சின்னீராலங் கொல் பான்மையாரை'என்றது.  சில் நீர் - அற்பமான
நீரையுடைய சுனை:அன்மொழித்தொகை.

     நயனி-நயனங்களையுடையவன்:வடமொழி.  இல்லா நயனி-இல்லாத
நயனங்களையுடையவன்:கண்ணில்லாதவன்என்பது பொருள்;இது,
வடமொழிநடை.  மூன்று காலங்கள் - அக்காலங்களில் நிகழும்
வரலாறுகளுக்கு, ஆகுபெயர்.                             (696)

43.பூண்டவெள்ளரவத்தோடு புனைமதிவேணியார்க்குத்
தாண்டவநடனஞ்செய்யத் தக்கதோர்தழல்வெங்கானில்