பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்443

 பாண்டவர்தம்மைக்கொல்லப் பணித்தனையொருகாலாவி
மாண்டவர்பின்னும்பின்னும் மாள்வரோமதியிலாதாய்.

     (இ-ள்.)பூண்ட-ஆபரணமாகவணிந்த, வெள் அரவத்தோடு-
வெண்ணிறமுள்ள பாம்போடு, மதி புனை-பிறைச்சந்திரனை(முடிக்கு
அணியாக) அணிந்த,வேணியார்க்கு-சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு,
தாண்டவம் நடனம் செய்யத்தக்கது-தாண்டவமென்கிற
நர்த்னத்தைச்செய்வதற்குஏற்றதான, ஓர்-(கடுமையில்) ஒப்பற்ற, தழல் வெம்
கானில்-நெருப்புப்போல்வெம்மையான காட்டிலே, பாண்டவர்தம்மை -
பஞ்சபாண்டவர்களை,கொல்ல - உயிர்கவருமாறு, பணித்தனை-
கட்டளையிட்டாய்:மதி இலாதாய் - அறிவுஇல்லாதவனே! ஒருகால் ஆவி
மாண்டவர்-ஒருமுறை ஆவிநீங்கினவர், பின்னும் பின்னும் மாள்வர்ஓ-?  
(எ - று.)

     சிவபெருமான்தாண்டவநடனஞ்செய்யத்தக்கது என்றதனால்,அந்தக்
கானகம் மயானம்போன்றதென்றபடி.  தாண்டவம் - மிருதுவாய் இனிதாக
இருப்பதன்றி, இதற்குமாறாகக்கடுமையாயுள்ளநடனம்.            (697)

44.-பூதம்காளமாமுனியைக் கொல்லுதல்.

நீயிதற்கிலக்கமாகி நின்றனையென்றுகோபத்
தீயெழப்பொடிக்குங்கண்ணுஞ் சிரிப்பெழுமெயிறுமாகி
மூவிலைச்சூலந்தன்னான்முனிதலைதுணிந்துவீழ
ஏவலிற்பழுதில்பூத மிவனையேயெறிந்ததன்றே.

     (இ - ள்.)ஏவலில்-ஏவிய தொழிலைச்செய்வதில், பழுது இல்
தவறுதலில்லாத, பூதம் - பூதமானது, (காளமாமுனியைநோக்கி), 'நீ-,இதற்கு
- இந்தத்தீவினைக்கு,இலக்கம்ஆகி - குறியாகி, நின்றனை-நின்றாய்,'என்று
- என்றுசொல்லி, கோபம் தீ எழ - கோபாக்கினி பொங்குமாறு, பொடிக்கும்-
தோன்றுகிற, கண்உம் - கண்களையும்,சிரிப்பு எழும் எயிறுஉம் - வெகுளிச்
சிரிப்பு வெளித்தோன்றுகிற பற்களையும்,ஆகி-உடையதாய், மூ(ன்று) இலை
சூலம்தன்னால்-மூன்றுஇலைகளைக்கொண்டசூலாயுதத்தினால்,முனிதலை
துணிந்து வீழ-முனிவனதுதலைதுண்டுபட்டுக் கீழ் விழும்படி, இவனைஏ-
இந்தக்காளமாமுனிவனையே,எறிந்தது - வெட்டியது;(எ - று.)- அன்றே-
தேற்றம்.

    இலக்கம்-லக்ஷ்யம்:இது, 'இலக்கு'எனவும் திரிந்துவரும்.  சிரிப்பு-
இங்கே, வெகுளிச்சிரிப்பு.  நீ இதற்கு இலக்கம் ஆகி-நீ இந்தப் பூதத்திற்கு
(வீழ்த்தவேண்டிய) குறிப்பொருளாகி எனினுமாம்:இப்பொருளில், பூதம்
'இதற்கு'என்று தன்னைப்படர்க்கையாகப்பேசிற்றென்க.       (698)

45.-பூதம்ஓமகுண்டத்திலொளிக்க, பாண்டவர் உயிர்
பெற்றதைக்கேள்என்று கதைகூறுபவர் சொல்லுதல்.

எறிந்ததுமீண்டுமோம வெரியிடையொளிக்கக்கானில்
செறிந்தமாமுனிவர்யாருந் தேவரோடிரங்கியார்ப்ப