அறிந்தவரவனியாளு மரசனைவெறுக்கத்தம்மில் பிறிந்தவர்மீண்டுமாவி பெற்றவாபேசக்கேண்மோ. |
(இ - ள்.)எறிந்தது - (முனிவனைச்சூலத்தால்) தலையெறிந்தபூதம், மீண்டும்-, ஓமம் எரி இடை ஒளிக்க - ஓமாக்கினியிலேமறைந்து விட, கானில் - காட்டினிடையிலே, செறிந்த - நெருங்கிய, மாமுனிவர் யார்உம் - சிறந்தமுனிவர்களெல்லாரும், தேவரோடு-தேவர்களுடனே, இரங்கி - வருந்தி, ஆர்ப்ப-கதறவும்,-அறிந்தவர்-(துரியோதனன் செயலே இவர்களிறப்புக்குப் பரம்பரைக்காரணம் என்று) அறிந்தவர்கள், அவனி ஆளும் அரசனை- பூமியை ஆட்சி புரியும் அரசனாகியதுரியோதனனை,வெறுக்க-வெறுக்கவும், தம்மில் பிறிந்தவர்- தம்முடம்பினின்று உயிர்நீங்கப்பெற்ற அப்பாண்டவர், மீண்டுஉம் - மறுபடியும், ஆவி பெற்ற ஆ - உயிர்பெற்றவகையை, பேச - சொல்ல, கேள்-கேட்பாயாக;(எ-று.)-மோ-முன்னிலையசை. இது,பாரதகதையை ஜநமேசயமகாராசனுக்குக் கூறும் வைசம் பாயனரின்கூற்றாகஅமைந்துள்ளது:இனி, 'கேண்மோ'என்பதில் 'மோ' என்பதை முன்னிலையசையாகக்கொள்ளாமல்,'ஓ'அசை எனக்கொண்டு, பாரதகதையைப்படிப்பவரைக்குறித்து நூலாசிரியர் கேண்ம்[கேளுங்கள்]எனக் கூறுகின்றாருமாம். 'ஆர்ப்ப''வெறுக்க'என்றசெயவெனெச்சங்கள், பிறிந்தவரென்பதிலுள்ள 'பிறி'என்பதனொடுஇயையும். 'தம்மிலிறந்தவர் மீண்டு மாவிபெற்றவா றியம்பக் கேண்மோ'என்றும் பாடம். (699) வேறு. 46.-தருமபுத்திரன்உணர்வை யடைதல். மூச்ச றப்புலர்ந் துயங்கிய முரசவெங் கொடியோன் மாச்சி னைத்தடஞ்சந்தன மகீருக நிழலில் வீச்சு றப்பயி றென்றலான் மெய்யுயி ரெய்தி நாச்சு வைப்படு ஞானநன் மந்திர நவிலா. |
இரண்டு கவிகள் - ஒருதொடர். (இ - ள்.) மூச்சு அற - மூச்சு இல்லாமல், புலர்ந்து - வாடி, உயங்கிய - வருந்தின, முரசம் வெம் கொடியோன் - முரசமெழுதிய வெவ்விய கொடியையுடையனானதருமபுத்திரன், மா சினை-பெரிய கிளைகளைக்கொண்ட,தட-பெரிய[ஓங்கிவளர்ந்த],சந்தனம் மகீருகம்- சந்தனமரத்தின், நிழலில் - -நிழலிலே, வீசுஉற - வீசுதல் பொருந்துதலால், பயில் - (உடம்பில்மெல்லப்)படுகிற, தென்றலால்-தென்றற் காற்றினால்,மெய் - தன்னுடலில், உயிர்-மூச்சை, எய்தி-அடைந்து, நா சுவை படும் - நாவுக்குச்சுவைத்தல் பொருந்திய, ஞானம் நல்மந்திரம் - நல்லறிவை வளர்க்கவல்ல மந்திரமாகிய திருவஷ்டாக்ஷரத்தை, நவிலா - பன்முறை சொல்லி, (எ - று.)-வீட்டி, எய்தி, நினைந்தான்என அடுத்த கவியோடு முடியும்:ஆதலால், இவை இரண்டும் - குளகம். |