பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்445

    மூர்ச்சையடைந்திருந்த தருமபுத்திரன், சந்தனமரத்தில்நிழலில்
அடிக்கடி தென்றல்வீசுதலால் அந்தமூர்ச்சைதெளிந்து மூச்சுவரப் பெறவே,
ஞானத்தையுண்டாக்கவல்ல மந்திரத்தைச் செபித்தன னென்பதாம்.
சீவாத்மஸ்வரூபம் பரமாத்மஸ்வரூபம் முதலியவற்றை நன்கு தெரிவிப்ப
தாதலால், திருவஷ்டாக்ஷரத்தை 'ஞானமந்திரம்'என்றாரென்னலாம். இம்
மந்திரம் நாவுக்குச் சுவைக்கு மென்பதை, "எனக்கென்றும்,
தேனும்பாலுமமுதுமாய் திருமால்திருநாமம், நானுஞ்சொன்னேன்
நமருமுரைமின் நமோநாராயணமே"என்ற திருமங்கைமன்னன் பாசுரத்தால்
தெளியலாம்:('ராமநாமமேகற்கண்டு,ரஸமறியாதவனே கற்கண்டு'
என்பது,இங்கு ஞாபகத்திற்கு வருகிறது.)

    மகீருகம்-மஹீருஹம்:பூமியில் முளைப்பதெனமரத்திற்குக்
காரணக்குறி.  தென்றல் - தெற்கிலிருந்து வருங் காற்று.  (வடக்கிலிருந்து
வருங் காற்று-வாடை என்றும், குடக்கில்[மேற்கில்]நின்று வருங் காற்று -
கோடையென்றும், குணக்கில் [கிழக்கில்]நின்று வருங்காற்று
கொண்டல்என்றும் கூறப்படும்.)  உயிர் - உயிர்ப்பு:முதனிலைதிரிந்த
தொழிற்பெயர்.

     இதுமுதல்பதின்மூன்றுகவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிவந்த நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.                     (700)

47.-தருமன்தம்பியரை நினைத்தல்.

தனைப்பயந்தநற்றருமதேவதைதிருவருளால்
வினைப்பயன்களாலுறுதுயர்யாவையும்வீட்டிச்
சுனைப்பெரும்புனற்றாகமு மடிக்கடிதோன்ற
நினைப்புமெய்தியத்தம்பியர்தம்மையுநினைந்தான்.

     (இ-ள்.) தனைபயந்த - தன்னைப்பெற்ற,நல் - சிறந்த, தரும
தேவதை - யமதருமராசனது, திருஅருளால்-மேன்மையான கருணையினால்,
வினைப்பயன்களால்உறு- தீவினைப்பயன்களால்தோன்றுகிற,
துயர்யாவைஉம் - துன்பங்களையெல்லாம், வீட்டி - ஒழித்து, சுனைபெரு
புனல் தாகம்உம் அடிக்கடி தோன்ற - சுனையிலுள்ளமிக்கநீரைப் பருக
வேணுமென்ற ஆசையும் அடிக்கடி தோன்றாநிற்க,நினைப்புஉம்எய்தி-
முன்னே ஸ்மரணையையும்,அடைந்து,அ தம்பியர் தம்மைஉம் நினைந்தான்
- (நீர்கொணரச்சென்ற) அத்தம்பியரைப் பற்றியும் (பின்பு)நினைப்பிட்டான்;
(எ - று.)

     ஸ்மரணையடைந்ததருமபுத்திரன், தாகம் தோன்றாநிற்க,
தம்பியரைநினைத்தானென்க. வீட்டி-இறந்தகாலவினையெச்சம்.  (701)

48.-தருமபுத்திரன்சென்று வீழ்ந்துகிடக்குந் தம்பியரைக்
காணுதல்.

ஆனதன்மனவலியுட னாண்டுநின்றெழுந்து
கானகத்திடைநீங்கிய வறன்றருகாளை