பக்கம் எண் :

446பாரதம்ஆரணிய பருவம்

போனதம்பியர்சேவடிக் சுவட்டினிற்போயத்
தூநிறப்புனலுண்டுவீழ் துணைவரைக்கண்டான்.

     (இ-ள்.)கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை (நாட்டினின்றும்
வனவாசஞ் செய்யும்படி) காட்டினிடத்துச்சென்ற யமதருமனாற்பெறப்பட்ட
புத்திரனாகியயுதிஷ்டிரன்,-ஆன தன் மனம் வலியுடன்-பொருந்திய
தன்மனத்தின் வலிமையோடு, [மனோதைரியத்தோடு],ஆண்டுநின்று -
அவ்விடத்திலிருந்து, எழுந்து-புறப்பட்டு, போன-(நீர்கொணருமாறு
தன்கட்டளையைப்பெற்றுச்)சென்ற,தம்பியர்-தம்பிமாரின், சே அடி
சுவட்டினில்-பாதம் வைத்த அடையாளத்தின்வழியே, போய்-
தொடர்ந்துசென்று,-அ தூ நிறம் புனல் உண்டு வீழ் துணைவரை-
அந்தச்சுனையின்சுத்தமானநிறத்தையுடைய நீரைப்பருகி
வீழ்ந்துகிடக்கின்றதம்பிமாரை, கண்டான்-பார்த்தான்;(எ - று.)

     ஆண்டுநின்றுஎழுந்து என்பதை, கானகத்திடைநீங்கிய என்பதனுடன்
இயைத்துப் பொருள் காண்பாரு முளர்.  உண்டு என்பதில்,
உண்ணுதலென்றபொதுவினை- சிறப்பாகப்பருகுதலென்ற பொருளைத்
தந்தது.                                                (702)

49.-தம்பிமார்இறந்துகிடப்பதைக் குறித்துத்
தருமபுத்திரன்எண்ணமிடுதல்.

ஊறிலாமைகண்டுடற்றின ரில்லெனவுணர்ந்து
மாறிலாதவரெங்ஙன மாருயிர்மாய்ந்தார்
சேறிலாதவெஞ்சுரத்திடைச் செழும்புனனுகரும்
பேறிலாமையினிறந்தனர் போலுமிப்பெரியோர்.

     (இ-ள்.) ஊறுஇலாமை-(தம் தம்பிமார் உடம்பில்) புண்படு
தலில்லாமையை, கண்டு-பார்த்து, 'உடற்றினர்-(இவர்களைப்)போர்செய்து
அழித்தவர்,இல்-இல்லை,'என-என்று, உணர்ந்து-அறிந்து, (பின்பு),
'மாறுஇலாதவர்- (தமக்கு) ஒப்புஇல்லாதவராகிய வீமன் முதலியவர்கள்,
எங்ஙனம்-எவ்வாறு, ஆர் உயிர்-(தமது) அருமையான உயிர், மாய்ந்தார்-
இறந்தார்?சேறு இலாத - சாரமானதன்மை யில்லாத, வெம் சுரத்திடை-
கொடிய பாலைவனத்தில்,செழு புனல் - நிலவளத்துக்குக்காரணமான
புனலை,நுகரும் - பருகுகின்ற, பேறு-பாக்கியத்தை, இலாமையின்-
உடையவராகாததனால்,இ பெரியோர்-இந்தப் பெரியவர், இறந்தனர்
போலும்-உயிரொழிந்தார் போலும்';(எ-று.)-'என்றுதருமபுத்திரன்
எண்ணமிட்டான்'என்று வருவித்து முடிக்க:இது, சொல்லெச்சம்
எனப்படும்.

     'ஒருகால்வீமன்முதலியோர் பகைவரால் மாய்ந்தனரோ?'என்று
சங்கித்து, 'இவருடம்பில்ஆயுதவடு ஒன்றுமில்லாமையால், இவர்கள்
பகைவரோடுபொருது இறந்தவரல்லர்'என்று துணிந்து, பின்னர் 'இவர்கள்
எவ்வாறு மாய்ந்தார்?'என்று ஆலோசித்து, தாகம் விஞ்சிப் பருகத்
தண்ணீர்கிடைக்காத இளைப்பினால்தான்இவர்கள் இறந்திருக்கவேண்டுமென்று
எண்ணமிட்டா னென்க.  சேறு ஸார