களோ? என்று - என்றஎண்ணத்தினால்,அருள் இல் வஞ்சகன் - கருணையில்லாதவஞ்சகனாகியதுரியோதனன், செய்த-, வஞ்சனை-வஞ்சகச் செயலாகும், இது-,'என - என்று, மதித்து - (தருமபுத்திரன்) எண்ணி,- தான்உம் நஞ்சம் நீர்கொடு - தானும் விஷநீரைக்கொண்டு, தன் நாவினை- தனதுநாக்கை, நனைக்கும்- ஈரமுண்டாக்கவேணுமென்று நினைக்கிற, நெஞ்சன் ஆகி - மனத்தை யுடையவனாய்,அநிறை புனல் கயத்திடை- நிறைந்தநீரைக்கொண்ட அந்தச்சுனையினிடத்தில்,நேர்ந்தான் - போய்ச்சேர்ந்தான். (எ - று.) பாண்டவர்வனவாசஞ்செய்கையில் சூழ்ச்சிசெய்து அவரைக் கொல்லாவிட்டால்,வனவாசகாலம் நீங்கியபின் நம்முடன்பொருமாறு வருவார்: ஆதலால், அவரை வனவாசகாலத்திற்குள் கொன்றிட வேணும் என்று ஆலோசித்த துரியோதனன், பிறகு 'காட்டில்பாண்டவர் அலைந்துதிரியும்போதுஇங்குத் தண்ணீர் பருகவருவர் ஆதலால் இந்நீரை உண்டு அவர்கள் சாகுமாறு விஷத்தைக் கலந்து வைப்போம்'என்று சூழ்ச்சி செய்து இங்ஙனம் இந்நீரைநஞ்சமாக்கி யிருக்கவேண்டுமென்று யுதிஷ்டிரன் தன்மனத்தில் எண்ணினான். பின்பு நம் தம்பிமார் இறந்துவிட்டதனால் நாம்மாத்திரம் உயிர்வைத் திருப்பதிற் பயனில்லைஎன்ற கருத்தினால், தானும் தன்விடாய் தணிய நீர்பருகுமாறு சுனையின்கரையைஅடைந்தா னென்க. (705) 52.-இதுவும், அடுத்தகவியும்-தருமபுத்திரன் தண்ணீரைப்பருகத்தொடங்கிய சமயத்தில், அசரீரிகூறுதலைத்தெரிவிக்கும். திருந்துநல்வரைச்செங்கையா லள்ளியநீரை அருந்துமவ்வயினகல்விசும் பிடையசரீரி கருந்தடம்புனனஞ்சிது நுகர்வதுகருதேல் விருந்தர்நால்வருமென்மொழி கேட்டிலர்வெய்யோர். |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ-ள்.)(தருமபுத்திரன்), திருந்து நல் வரை செம் கையால்- அழகுபொருந்திய நல்லரேகைகளைக்கொண்ட(தனது)செந்நிறக்கையினால், அள்ளிய-முகந்தெடுத்த, நீரை-(அந்தச்சுனையின்)ஜலத்தை,அருந்தும் - பருகப்போகின்ற, அ வயின் - அச்சமயத்தில்,-அகல் விசும்பிடை- பரந்தஆகாசத்திலேதோன்றிய,அசரீரி-அசரீரியானது,- (அந்தத்தருமபுத்திரனைநோக்கி),கரு தடம் புனல்-கருநிறமுள்ள இந்தச்சுனையின்நீர்,நஞ்சு - விஷமுள்ளதாம்:(ஆதலால்), இது-இந்நீரை, நுகர்வது கருதேல் - பருகுமாறு எண்ணாதே:வெய்யோர்-கொடியோராகிய, விருந்தர் நால்வர்உம்-(இவ்விடத்திற்குப்) புதியவராய் வந்த நான்குபேரும், என் மொழி கேட்டிலர் - (இந்நீரைப்பருக வேண்டா என்று)நான் கூறிய வார்த்தையைக் கேட்டாரில்லை:(ஆதலால்) நீரைப் பருகி உயிர்மாய்ந்தனர்); (எ - று.) இச்செய்யுளிலுள்ள 'அசரீரி'என்பது, அடுத்த செய்யுளிலுள்ள 'என' என்பதனோடுஇயையும். அசரீரி=சரீர மில்லாத |