பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்449

தெனக் காரணப்பொருள்படும்:இதனை,ஆகாயவாணியென்று கூறுதலு
முண்டு.  விருந்து-புதுமை;புதியராய் வந்தவர், விருந்தர்.
'நால்வரென்மொழிகேட்டிலர்'என இங்கு அநுவாதமாக வந்ததனால்,
சகதேவன்முதலியோர்சுனைநீரைப்பருகும்போதும் அசரீரி
தடுத்ததெனக்கொள்ளுதல் ஏற்கும்:இனி, தன்வார்த்தையைத் தருமபுத்திரன்
தள்ளாது கேட்க வேணுமென்ற கருத்தினால்,'நால்வர்என்மொழி கேட்டிலர்
வெய்யோர்'என அசரீரி கற்பித்துக்கூறுகின்ற தெனக் கொள்வாருமுளர். (706)

53.உன்னையான்வினவுரைதனக்குத்தரமுரைத்துப்
பின்னைநீநுகர்பெறாதுபெற்றனையவிப்புனலை
அன்னைபோலுயிரனைத்தையும்புரந்திடுமரசே
என்னையோபெருந்தாகம்விஞ்சிடினுமின்றெனவே.

     (இ - ள்.)அன்னைபோல் - தாயைப்போல், உயிர் அனைத்தைஉம்
- எல்லாவுயிர்களையும்,புரந்திடும் - பாதுகாக்கின்ற, அரசே-அரசனே!
இன்று - இப்போது, பெரு தாகம் விஞ்சிடின்உம் - மிக்கதாகம்
அதிகரித்தாலும், என்னைஓ- அதனாலென்ன?யான்-, உன்னை-,வினவு
உரை தனக்கு - வினாவுகின்றபேச்சுக்களுக்கு, உத்தரம் உரைத்து -
மறுமொழிகூறிவிட்டு, பின்னை- பின்பு, நீ-, பெறாதுபெற்று அனைய-
அடையத்தகாத பொருளை(அரிதில்) அடைந்தாற்போன்ற, இ புனலை-
இந்தநீரை, நுகர் - பருகுவாய், என-என்று, கூற,-(எ-று.)-இச்செய்யுளில்
'என'என்பது அடுத்தசெய்யுளிலுள்ள "என்றான்"என்ற முற்றோடுமுடியும்.

     பெறாது- எளிதிற்பெறப்படாதது:எதிர்மறை யொன்றன்பால்
வினையாலணையும்பெயர்.'பெற்று'என்ற இறந்தகால வினையெச்சம்-
பெற்றால்என எதிர்கால வினையெச்சப்பொருள்படுதலால் எச்சத் திரிபாம்.
                                                       (707)

54.-தன்னைவினவுமாறு தருமபுத்திரன் அவ்வசரீரியை
நோக்கிச்சொல்லுதல்.

பெருநலம்பெறுமகனையப்பேரறக்கடவுள்
இருவிசும்பினிலருவமா யியம்பியமாற்றம்
திருவுளந்தனிற்கொண்டுதன் செங்கைநீர்வீழ்த்திப்
பொருவிலாமகன்புகலுவ புகறிநீயென்றான்.

     (இ - ள்.) அபேர் அறம் கடவுள் - அந்தப் பெருமைபெற்ற அறத்தை
நிலைநாட்டுகின்றகடவுளாகிய யம தருமராசன், பெரு நலம் பெறு மகனை-
மிக்க நற்குணம்பெற்ற புத்திரனாகியயுதிஷ்டிரனைநோக்கி, இரு
விசும்பினில் - பெரிய ஆகாயத்தில், அருவம்ஆய் - அசரீரியாய்நின்று,
இயம்பிய - கூறிய, மாற்றம் - வார்த்தையை,-பொரு இலா மகன் -
ஒப்பற்றமகனாகியஅந்தத்தருமபுத்திரன், திரு உளம்தனில் கொண்டு -(தனது)
சிறந்தமனத்திலே எண்ணி, தன் செங் கை நீர் வீழ்த்தி - தனது
செந்நிறக்கையில் அள்ளிய நீரைக்