பக்கம் எண் :

450பாரதம்ஆரணிய பருவம்

கீழே கொட்டிவிட்டு, 'நீ-, புகலுவ-சொல்லக்கருதியிருப்பவற்றை, புகறி -
சொல்வாய்,' என்றான் - என்று கூறினான்; (எ-று.)

     அசரீரியாய்க் கூறியது அறக்கடவுளே என்பது, இச்செய்யுளால் விளங்கும்.
அவருவம்=அருபம்: வடசொல்லின்திரிபு. புகலுவ - பலவின்பால்வினை
யாலணையும்பெயர். புகறி - முன்னிலையேவலொருமை வினைமுற்று.    (708)

55.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்: அறக்கடவுளின்
வினாக்களையும்
அதற்குத் தருமன் கூறிய
விடைகளையும் தெரிவிக்கும்.

சொல்லு நூல்களிற்பெரியதேதரியமெய்ச்சுருதி
யில்லறத்தினுக்குரியதேதெண்ணுடையில்லாண்
மல்லன்மாலையின்மணமுளதேதுவண்சாதி
நல்லமாதவமேதுதங்லம்புரிநடையே.

     (இ-ள்.) சொல்லும் நூல்களில் - (உலகத்திற்) சொல்லப்படுகின்ற
சாஸ்திரங்களில், பெரியது-பெருமைபெற்றது, ஏது-எது? (என்பது அசரீரியின்
வினா: இதற்க யுதிஷ்டிரன் விடை): - அரிய மெய் சுருதி -
(பிறநூல்களிற்கிடைப்பதற்கு) அருமையான மெய்ம்மைப்பொருளையுடைய
வேதமேயாகும்: இல்லறத்தினுக்கு உரியது ஏது - கிருகஸ்தாச்சிரமத்துக்கு
உரிமையான பொருள் எது? (என்பது வினா: இதற்குவிடை):-எண் உடை
இல்லாள்-(நற்குணங்களால்) மதிப்பு வாய்ந்த மனைவியே யாவன்: மல்லல்
மாலையில்-வளப்பமுள்ள பூமாலைகளில், அணம் உளது-நறுமணத்தையுடையது,
ஏது-எது? (என்பதுவினா: இதற்குவிடை):-வண் சாதி-வளப்பமுள்ள
சாதிப்பூமாலையேயாகும்: நல்ல மா தவம் ஏது-சிறந்த பெரிய தவம் எது?
(என்பதுவினா: இதற்குவிடை): - தம் குலம் பரி நடைஏ-தமதுகுலத்துக்கு ஏற்ப
அநுஷ்டித்துவருகின்ற நல்லொழுக்கமே; (எ-று.)

     ஒருவர் தமதுகுலாசாரம் தவறாதுநடப்பின், அவருக்கு வேறு மாதவம்
வேண்டா என்பது, ஈற்றடியாற் பெறப்படும். சுருதி-ஸ்ருதி: எழுதாக்கிளவியாய்க்
குருசிஷ்யபரம்பரையிற் கேள்விமூலமாய் வருவது எனக் காரணப்பொருள்படும்
வடசொல். இல்லறம்-வீட்டில் மனைவியுடனிருந்து செய்யுந் தருமம்;
கிருகஸ்தாச்சிரமதருமம். சாதி ஜாஜீஎன்ற வடமொழியின் திரிபு என்பர்
ஒருசாரார்: இதனைப் பிச்சிப்பூ என்றும் வழங்குவர்.                 (709)

56.

முனிகுலந்தொழுகடவுள்யார்மொய்துழாய்முகுந்த
னனைமணங்கமழ்குழலினர்க்கியற்கையாததுநாண்
தனமிகுந்தவர்க்கேதரண்டகைபெறுதான
மினியதேதிருசெவிக்கிளங்குதலையரின்சொல்.