தாதையைசென்னியை சேர்த்திய என்பது வடமொழிநடை. ஏது=ஹேது என்பதன்திரிபு. இரண்டாமடி - முற்றுமோனை. இதுமுதல்இச்சருக்கம் முடியுமளவும்-மூன்றாஞ்சீர்ஒன்றுமாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாய்வந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள். (713) 60. | நச்சுநீர்குடித்துயிர் நீத்தநால்வரின் உச்சமாமன்புடை யொருவன்றன்னைநீ இச்சையானிம்மறை யியம்பியெண்ணியோர் அச்சமற்றழையென வருள்செய்தானரோ. |
(இ - ள்.)'நஞ்சுநீர் குடித்து-(சுனையின்)விஷநீரைப் பருகி, உயிர் நீத்த - (தம்) உயிரைவிட்ட, நால்வரின் - (வீமன் முதலிய) நால்வருக்குள், உச்சம் ஆம் அன்புஉடை ஒருவன் தன்னை- மிகுதியான அன்பையுடைய ஒருவனைக்குறித்து,நீ-, இச்சையான்-விருப்பத்தோடு, இ மறை இயம்பி - இந்தவேதமந்திரத்தைச் சொல்லி, எண்ணி - நினைத்து,ஓர் அச்சம் அற்று அழை - ஓர் அச்சமில்லாமல் அழைப்பாய்,'என - என்று, அருள்செய்தான் - கருணையோடு(அந்தமந்திரத்தைக்)கூறினான்,(அந்த யம தருமன்), (எ-று.) உச்சம்,இச்சா - வடசொற்கள். மூன்றாமடியும்நான்காமடியும்- முற்றுமோனை. நஞ்சு+நீர்=நச்சுநீர்:வேற்றுமையில் மென்றொடர்க் குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்று.இங்கே 'மறை'என்பது- வேதத்தின் மிகச்சிறுபகுதியாகிய ஒரு மந்திரத்தைக் காட்டிற்று. அரோ - ஈற்றசை. (714) 61.-தருமன்,மந்திரத்தாற் சகதேவனைஎழுப்புதல். தாதைகூறியமறை தனைக்கொண்டேசுதன் ஏதமுற்றிடாவகை யிளையதம்பியை ஊதைவந்துள்புக வுணர்ச்சிநல்கினான் வேதமுநிகரிலா விரதவாய்மையான். | (இ - ள்.)தாதை கூறிய-(தன்) தந்தையாகிய யம தருமன் உபதேசித்த, மறைதனைகொண்டு-வேதமந்திரத்தைக்கொண்டு, சுதன்- (அந்தத்தருமனுக்குப்) புத்திரனாகிய,வேதம்உம் நிகர் இலா-வேதமும் (தனக்கு) ஒப்பாகமாட்டாத, விரதம் வாய்மையான் - சத்தியத்தையே விரதமாகவுடையவனாகியயுதிஷ்டிரன், ஏதம் உற்றிடாவகை - நாசம் நேரிடாதபடி, இளையதம்பியை-இளையதம்பியின் சரீரத்தில், ஊதை - பிராணவாயுவானது, வந்து-, உள்புக - உள்ளேபுகுமாறு செய்து, உணர்ச்சி நல்கினான்- பிரஞ்ஞையை யுண்டாக்கினான்; விரதவாய்மையான், மறைதனைக்கொண்டுஇளையதம்பியையுணர்ச்சி நல்கினானென்க. இளையதம்பி என்பதற்கு-வியாசபாரதத்திற்கு ஏற்ப, நகுலனையெனக் கூறினுமாம். புக என்பதன் பின், 'செய்து'என ஒருசொல் வருவிக்கப்பட்டது.வேதம்போலவே தரும |