புத்திரன்சத்தியந்தவறாதவனென்பார் 'வேதமுநிகரிலாவிரத வாய்மையான்' என்றார். விரதவாய்மையான்-வாய்மை விரதத்தான் என விகுதிபிரித்துக் கூட்டுக. ஊதை-ஊது என்ற வினைப்பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர். தாதை, சுதன் - தாத:,ஸு த:என்ற வடசொற்கள் திரிபுகள். (715) 62.-சகதேவனைப்பிழைப்பித்ததுகண்டு 'வீமார்ச் சுனர்களைவிட்டு இவனைப்பிழைப்பிக்கக் காரணம் என்?' என்று யமதருமன் வினாவல். கண்டுநின்றறப்பெருங் கடவுள்வாயுவின் திண்டிறன்மாமகன் றேவர்கோமகன் மண்டழல்விடத்தினான்மடியமாமருத்து அண்டர்நல்கிளவலையழைத்ததென்னென்றான் |
(இ-ள்.)கண்டுநின்று - (யுதிஷ்டரன் சகதேவனைப்பிழைப்பித்த தைப்)பார்த்துநின்று, அறம் பெரு கடவுள் - யம தருமராசன், (தன் புத்திரனைநோக்கி), 'வாயுவின்- வாயுதேவனுடைய, திண் திறல்- மிக்க வலிமையுள்ள, மா மகன் - சிறந்தபுத்திரனும் [வீமசேனனும்],தேவர் கோமகன்-தேவாதிபனானஇந்திரனுக்குப் புத்திரனானஅருச்சுனனும், மண்டு அழல் விடத்தினால்- மூள்கின்ற வெப்பத்தையுடைய விஷத்தால், மடிய - மடிந்திருக்க, மா மருந்து அண்டர்-சிறந்த வைத்தியத்தொழிலைக்கொண்ட அசுவினீதேவர்கள், நல்கு-பெற்ற, இளவலை-இளையதம்பியை,அழைத்தது - உயிர்மீட்டது, என்-யாது காரணத்தினால்?'என்றான்-என்றுவினாவினான்; (எ-று.) 'உனக்குச்சொந்தமான தம்பிமாரும், பெருவீரருமான வீமார்ச்சுனர்களில் ஒருவரைப் பிழைப்பிப்பதைவிட்டு மாற்றாந்தாயின் புதல்வனாய்ச்சாதாரணவீரனானஇளையசகோதரனைப்பிழைப்பித்தது யாது காரணம்?' என வினாவினான்யமதருமராசனென்க. அண்டர்-தேவர்: 'மருத்துஅண்டர்'எனவே, வைத்தியத்தொழிலையுடைய அசுவினீதேவர்களைக்காட்டிற்று. திண்டிறல் - ஒருபொருட்பன்மொழி. (716) 63.-அதற்குத்தருமன் கூறிய விடை. குத்திரமிலாமொழிக் குந்திக்கியானொரு புத்திரனுளனெனப் புரிந்துநல்கினாய் மத்திரிக்கொருமக வில்லைவல்லவர் சித்திரம்வகுத்தெனத் திகழுமேனியாய். |
இதுவும் அடுத்த கவியும் - ஒருதொடர். (இ-ள்.)வல்லவர் சித்திரம் வகுத்து என-எழுதத்தேர்ந்தவர் சித்திரம் எழுதினாற்போல,திகழும்-விளங்குகின்ற, மேனியாய்-சரீரத்தையுடையவனே! குத்திரம் இலா மொழி-இழிவில்லாத பேச்சையுடைய, குந்திக்கு - குந்தீ தேவிக்கு, யான் ஒரு புத்திரன் உளன் |