என - 'யான்ஒரு புத்திரன் இருக்கிறேன்'என்று சொல்லுமாறு, புரிந்து- மனம் விரும்பி, நல்கினாய்-(என்உயிர்போகாதவாறு) கொடுத்திட்டாய்; மத்திரிக்கு-(எனது மாற்றாந்தாயாகிய)மாத்திரி யென்பவளுக்கோ, ஒரு மகவு இல்லை-(யான்இவனைப்பிழைப்பிக்காவிட்டால்)ஒருபுத்திரனும் இல்லை;(எ- று.)-ஆதலால்தான்இவனைப்பிழைப்பித்தேன் என்று வருவித்து முடிக்க. குத்திரம்-க்ஷுத்ரம், மத்திரி-மாத்ரீ: வடசொற்சிதைவுகள். குந்திக்கியான் - குற்றியலிகரம். (717) 64.-யமதேவன்தன்புத்திரனுக்குப் பகைவரை வெல்லும்மந்திரம் முதலியன தருதல். என்றுதன்றந்தையோ டியம்பத்தந்தையும் மன்றலந்தொடைமுடி மைந்தனுக்கமர் வென்றிடுமறைகளும் வில்லொடேவுவேல் என்றபல்படைகளும்யாவுநல்கினான். |
(இ-ள்.) என்று-,தன் தந்தையோடு-தன் தந்தையினிடத்தில், இயம்ப - (தருமபித்திரன்) சொல்ல,-தந்தைஉம்- (அவனது) பிதாவாகிய யமனும், மன்றல் - வாசனையுள்ள,அம் - அழகிய, தொடை-பூமாலையை,முடி - தலையிலணிந்துள்ள,மைந்தனுக்கு - புதல்வனாகியயுதிஷ்டிரனுக்கு, அமர் வென்றிடு-யுத்தத்தில் வெல்லவல்ல, மறைகள்உம் -மந்திரங்களையும், வில்லொடு - வில்லுடனே, ஏவு வேல் என்ற - பகைவர்மீது விடத்தக்க வேல் என்று சொல்லப்படுகிற, (இவ்வாறான),பல் படைகள்உம் - பல ஆயுதங்களையும்,யாஉம் - மற்றும் அவன்கேட்ட எல்லாவரங்களையும், நல்கினான்- கொடுத்தான்;(எ-று.) தம்பிமாரைப்பிழைப்பித்தமை 'யாவும்நல்கினான்'என்பதனாற் பெறப்படும். வென்றிடுமறை, ஏவுவேல் - வினைத்தொகைகள். வில்லொடெஃகம் வேல் என்றும்பாடம். (718) 65.-இரண்டுகவிகள்- ஒருதொடர்:துரியோதனன் அபிசாரவேள்விசெய்வித்தது முதலியவற்றை யுதிஷ்டிரனிடம்யமதேவன் தெரிவித்தல். கருதலனழைத்ததுங் காளமாமுனி புரிதழல்வளர்த்ததும் பூதம்வந்ததும் அருகிவர்நச்சுநீ ரருந்திமாய்ந்ததும் விரிசினத்துடனது மீண்டுபோனதும். |
(இ-ள்.)கருதலன் அழைத்ததுஉம்-பகைவனானதுரியோதனன் ஒருமுனிவனைக்கொண்டுகாளமாமுனியை) அழைப்பித்ததையும், காளமாமுனி புரி தழல் வளர்த்ததுஉம்-(நிர்ப்பந்தத்திற்குக்கட்டுப்பட்டு) அந்தக்காளமாமுனிவன் ஓமஞ்செய்கின்ற அக்கினியை வளர்த்து வேள்விசெய்ததையும், பூதம் வந்ததுஉம் - (அந்த வேள் |