பக்கம் எண் :

456பாரதம்ஆரணிய பருவம்

விக்குண்டத்திலிருந்து) பூதமொன்று வெளிப்பட்டுவந்ததையும், இவர் அருகு
நஞ்சு நீர் அருந்தி மாய்ந்ததுஉம்-இந்த உன் தம்பிமார் அருமையாய்க்கிடைத்த
விஷநீரைக்குடித்து உயிரொழிந்ததும், அது விரிசினத்துடன்மீண்டு போனதுஉம்
- அந்தப்பூதம் (முன்னமே இறந்த பாண்டவர்களைக்கொல்லுமாறு
என்னைஏவினையே! என்று) மிக்க சினத்துடனே
(தன்னையேவியகாளமாமுனிவனிடம்) திரும்பிச் சென்றதையும்,-(எ-று.)

    அருகுநீர்-அருகிய நீர்: அரிதிற்கிடைத்த நீர்.  இனி தமக்கு அருகே
(கிடைத்த) நீர் என்றலுமாம்.  நஞ்சு+நீர்=நச்சுநீர்: [நன்-உயிர்.34]    (719)

66.முனிவனைக்கொன்றதுமுனிவன்வாய்மையில்
துனிவனத்துழையினைத்தொடர்ந்துபோயதும்
தனிவனத்திடைவிடத் தடாகஞ்செய்ததும்
இனிமையிற்புத்திரற் கியாவுங்கூறினான்.

     (இ-ள்.) முனிவனைகொன்றதுஉம் - (தன்னையேவிய)முனிவனையே
(அந்தப்பூதம்) கொன்றிட்டதையும், முனிவன் வாய்மையின்-
ருஷிகுமாரனுடைய வார்த்தையினால்,துனி வனத்து-வெறுப்புக்கு இடனான
காட்டிலே, உழையினைதொடர்ந்து போயதுஉம்-(பாண்டவர்கள்) மானைத்
தொடர்ந்து சென்றதையும், தனி வனத்திடை - (கொடுமையால்) ஒப்பற்ற
காட்டிலே, விடம் தடாகம் செய்ததுஉம் - விஷநீரையுடைய பொய்கையை (த்
தான்) உண்டாக்கியதும், புத்திரற்கு - தன்மகனானயுதிஷ்டிரனுக்கு, யாஉம் -
எல்லாவற்யைும், இனிமையின் கூறினான்? இனிது சொன்னான்;(எ-று.)

     முனிவன் க்ருஷ்ணாஜிநத்தைமான் கவர்ந்துகொண்டுபோனது
முதலியன, துரியோதனன் காளமாமுனியைக்கொண்டு செய்வித்த
அபிசாரவேள்வியினால்பாண்டவராகியநீங்கள் உயிர்மாளாதிருத்தற்
பொருட்டு யான் செய்வித்தசெயல்களே யென்பது விளங்க,
'இனிமையின்யாவும்கூறினான்'என்றது.                        (720)

67.-'வனவாசங்கழித்துஅஜ்ஞாதவாசகாலத்தையும்
இனிதுகழிப்பீர்'என்று ஆசிசொல்லி யமன் சென்றிடுதல்.

நன்பெருவனஞ்செறி நாளகன்றன
பின்பிறரறிவுறாப்பெற்றிபெற்றுநீர்
துன்புறாதிருமெனச்சொல்லியேகினான்
அன்பினாலருள்புரிந்தரியதாதையே.

     (இ-ள்.)'நல்- நல்ல, பெரு வனம் - பெரிய காட்டிலே, செறி-
நெருங்கிக்கழிக்கவேண்டிய, நாள - நாள்கள் [பன்னிரண்டுவருஷங்கள்],
அகன்றன பின் - கழிந்தனவானபிறகு, நீர்-,-(அஜ்ஞாதவாசஞ்
செய்யவேண்டிய ஓர்யாண்டிலும்), பிறர் அறிவு உறாபெற்றிபெற்று - பிறரால்
அறியப்படாத தன்மையையடைந்து,