ஆரணிய பருவத்தின் அபிதான சூசிகையகராதி அட்சயபாண்டம் -அருக்கனுதவியது, துரு -10. அபிமன் - அருச்சுனன்புதல்வன், அருச் - 140. அமராவதி -வானுலகத்து நகர், நிவாத - 111 அமித்திரமுனி -இவன் பொருட்டு வருடத்திற்குஒருமுறை தோன்றும் நெல்லிக்கனியைஅருச்சுனன்அறி யாதுபறித்திட்டான், பழ - 1. அருச்சுனன் - வில்வலான், பழ - 9: மரகதச்சோதிவீரன், அருச் - 126: அபிமனைப்பெற்றவன், அருச்-140: திருமாலினமிசம், நிவாத - 152: விசயன், பார்த்தன், கிரீடி முதலியபெயர்களையுடையவன்:துரு-6. குரங்குக்கொடியுடையான்,நச்-38. அளகை-குபேரனகரம்,புட்ப-83, மணி - 66. இடிம்பவனம்-கடோற்கசன் வாழிடம். மணி - 111. இந்திரகீலம் -பாண்டவர் சார்ந்திருந்த மலை,புட்ப 7:அருச்சுனன் தவஞ் செய்த மலை,புட்ப - 8. இந்திரன் -அருச்சுனனுடைய பிறவிக் குக் காரணமானபிதா, நிவாத - 13: படைகள்கற்பித்தவன், நிவாத - 5. இமயம்-கைலாசஞ்செல்லும் வழியிடையுள்ள மலை,அருச் - 31. இரத்தனகிரி -இரண்டாமுறை திரௌபதியின்விருப்பின்படி மலர் கொணரச்சென்றபோது வீமனது வழியிடையேயிருந்த தொரு மலை,மணி - 7. உருத்திரசேனன்குபேரன் மகன், புட்ப-119,மணி - 85. ஆர-A உரோமசன்-இந்திரன்விருப்பின் படி அருச்சுனனதுபிரிவில் பாண்டவரைத்தேற்றவந்து அவருடனிருந்தவன்:ஒருபிரமா விற்குஒருமயிர்வீதம் உதிரப் பெறுபவன்,நிவாத-160,புட்ப-6. கடோற்கசன் -இடும்பியினிடம் வீமனுக்குப்பிறந்த புதல்வனான இவன் நினைத்தபோதுவருபவன், மணி - 12. கதலிவனம் -இயக்கர்பதிக்குப் போகும் வழியிலுள்ளது:வீமன் அநுமானைச்சந்தித்த இடம்: புட்ப-13. கயிலை- சிவபெருமான் பார்வதி யோடு வாழும் மலை,அருச்-35. கன்னன்-சூதன்மைந்தன், சுயோதனன் தோழன், அருச் -11;கொடையால் இசைவளர்ப்பவன்,நச்-7. காஞ்சனவனம்-இயக்கர் பதிக்குப் போகும்வழியிலுள்ளது, புட்ப, 17. காந்தர்ப்பமலை- அருச்சுனன் துறக்கத்தினின்றுவருதற்கு வழியானது, புட்ப-6 காந்தாரி-துரியோதனன் தாயான இவள் சுபலன்பாவை, அருச்-17. காமன் - அருச்சுனன்தவத்தை யழிக்கத்தேவமாதரால் நினைக்கப் பட்ட கடவுள்,அருச் - 52. காமியவனம்-பாண்டவர் வசித்தவனம், அருச்-1. காலகேயர் -இரணியபுர வாசிகளான அசுரர்:நிவாத - 106;காலகை வழிந்தோன்றியவர், நிவாத - 107: பிரமனிடம் வரம்பெற்ற இவர்களின்தன்மை, நிவாத - 109, 110. அறுபதினா |