அருச்சுனனது மனவுறுதியைக் கண்கூடாகக் கண்டதனால் தேவேந்திரன் மனமகிழ்ந்து கிழமுனிவனான வேஷத்தை விட்டுத் தனதுநிஜவடிவத்தோடு அவ்வருச்சுனனுக்குப் பிரதியட்சமாகி 'உனக்குச் சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அளிப்பன்'என்று அனுக்கிரகித்தன னென்பதாம். வேடம்-வேஷம்;தன்கோலம் விட்டு வேறுகோலங்கொளல். தமக்கு இஷ்டமான ரூபத்தையெடுத்துக்கொள்ளும் வல்லமை தேவர்களுக்கு உள்ளமை தோன்ற, 'தெய்வத்தந்தை'என்றார். இந்திரன்-பரமைசுவரிய முடையவனென்று பொருள்படும் வடசொல்;(இதன்பெண்பால்-இந்திராணி.) பைந்தொடி-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. பாசுபதம் - பசுபதியினுடையது என்று பொருள்: தத்திதாந்தநாமம்: பசுபதி - பசுக்கட்குத்தலைவன்: பசுக்கள்-ஆன்மாக்கள்: இனி, பசு-எருதுமாம். (72) 73.-அருச்சுனன்கடுந்தவஞ் செய்வதைச் சேடியர் பார்வதீதேவியினிடம் கூறுதல். என்றுரைத்தமரர்கோமா னேகியபின்னர்வெள்ளிக் குன்றுடைப்புனிதன்பாதங் குறிப்புறுமனத்தனாகி நின்றுநற்றவஞ்செய்கின்ற நெடுந்தகைநீர்மையெல்லாம் சென்றுமைக்குரியரான சேடியர்செப்பினாரே. |
(இ-ள்.)என்று உரைத்து-என்று இவ்வாறு சொல்லி, அமரர் கோமான்- தேவராசனான இந்திரன், ஏகிய பின்னர்-போனபின்பு,-வெள்ளிகுன்று உடை புனிதன் பாதம்-வெள்ளிமயமான கைலாசகிரியை இருப்பிடமாகவுடைய பரிசுத்தனான பரமசிவனது திருவடிகளை, குறிப்புறும்-தியானிக்கின்ற, மனத்தன் ஆகி-மனத்தையுடையவனாய், நின்று-நிலைப்பெற்று, நல் தவம் செய்கின்ற-நல்ல தவத்தைச் செய்கிற, நெடு தகை-பெருமைக் குணத்தையுடைய அருச்சுனனது, நீர்மை எல்லாம்-தன்மை முழுவதையும், உமைக்கு-உமாதேவிக்கு, உரியர் ஆன சேடியர்-உரியவர்களாயுள்ள தோழிமார், சென்று செப்பினார்-போய்ச் சொன்னார்கள்;(எ-று.) நெடுந்தகை-பண்புத்தொகை யன்மொழி. தகை-தகுதி, நற்குணம்;இது - தொழிலடியாகப்பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர். நீர்மை- பண்புப்பெயர். அமரர் - அமிர்தமுண்டதனால் மரணமில்லாதவர். (73) 74.-அருச்சுனன்தவஞ்செய்வதைப் பார்வதி சிவபிரானிடம் கூறுதல். மேனைமுன்பெற்றகிள்ளை வேலையுஞ்சேலினோடு மானையும்பொருதசெங்கண் மரகதவல்லிகேட்டுத் தானையுங்கரியபேருத் தரியமுமாகச்சாத்த ஆனையன்றுரித்தநக்கற் கடிபணிந்தருளிச்செய்தாள். |
(இ-ள்.)மேனை - மேனகை யென்பவள், முன் - முன்னொரு காலத்தில், பெற்ற - ஈன்ற, கிள்ளை - கிளிபோலும் மொழியையுடை |