பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்55

யவளும், வேலைஉம் - வேலாயுதத்தையும், சேலினோடு - சேல்மீனையும்,
மானைஉம் - மான்விழியையும், பொருத - ஒத்த, செம் கண்-
சிவந்தகண்களையுடைய, மரகதவல்லி - மரகதரத்தினமயமான பூங்கொடி
போன்றவளுமாகிய பார்வதீதேவி, கேட்டு-(அருச்சுனன்தவத்தைத்
தோழியர்சொல்லக்)கேட்டறிந்து,-தானைஉம்-(அரையிலுடுக்கும்)
அந்தரீயமும், கரிய பேர் உத்தரியம்உம் ஆக - கரிய பெரிய மேல்
தரிக்கும் உத்தரீயமுமாக, சாத்த - தரிப்பதற்கு, ஆனை - யானையை,
அன்று - முன்னொருகாலத்தில், உரித்த - தோலுரித்த, நக்கற்கு -
சிவபெருமானுக்கு, அடி பணிந்து - திருவடியை வணங்கி, அருளிச்செய்தாள்
- (அருச்சுனன்தவநிலையைக்)கூறினாள்;(எ-று.)

     மரகதவல்லி கேட்டு, அடிபணிந்து நக்கற்கு அருளிச்செய்தாள் என்க.
இவ்வாறு பார்வதி அருச்சுனனது தவநிலையை அருளிச் செய்தது,
அவனுக்கு அருள்புரியவேண்டுமென்ற குறிப்பினாலென்க. மேனை - மேநா:
வடசொல்.  இவள் இமயமலையின் அதிதேவதையான இமவானது மனைவி.
தக்ஷமுனிவனது புத்திரியான ஜந்மத்தையொழித்த தாக்ஷாயணி ஒரு சிறு
பெண்குழந்தை வடிவமாய் இமயமலையி லிருக்க, அப்போது இமவானாலும்
மேனையாலும் புத்திரியாகக் கொள்ளப்பட்டுப் பார்வதியாயினளென்க.
அரையாடை அந்தரீயமென்றும், மேலாடை, உத்தரீய மென்றுஞ்
சொல்லப்படும்.  கிள்ளை-பெயர்த்திரிசொல்.  கிள்ளை, மரகதவல்லி-
உவமையாகுபெயர்கள்.  கண்களுக்கு, வேல் - கூர்மையாலும், கணவனைக்
காமநோயால் வருத்துதலாலும், சேல்-பிறழ்ச்சியாலும், மான்-பார்வையாலும்,
உவமை.  பொருத-உவமவுருபு. மரகதம் - பச்சையிரத்தினம்.
மரகதமென்பது எழுத்துநிலைமாறிவந்த இலக்கணப்போலி. நக்கன்=நக்நன்.(74)

வேறு.

75.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்;அருச்சுனன்
தவம்புரிதலைத் தான் அறிந்திருத்தலைச் சிவபெருமான்
விரிவாகக் கூறுதல்.

ஆலமுண் டமுதம் பொழிதரு நெடுங்க ணம்பிகை
                             யருண்மொழிகேட்டு,
நீலமுண்டிருண்ட கண்டனு மிரங்கி நிரைவளைச்செங்கை
                                  யாய்நெடிது,
காலமுண் டருள்கூ ரறத்தின்மைந் தனுக்குங் காற்றின் மைந்
                         தனக்குநே ரிளையான்,
ஞாலமுண் டவனுக் குயிரெனச் சிறந் தோ னரனெனு
                        நாமமும் படைத்தோன்.

     (இ-ள்.)ஆலம் உண்டு - விஷத்தை யுட்கொண்டு, அமுதம் பொழி
தரு-அமிருதத்தை வெளியே சொரிகின்ற, நெடு கண் - நீண்ட
திருக்கண்களையுடைய, அம்பிகை-உமாதேவி, அருள் - அருளிச்செய்த,
மொழி-வார்த்தையை, கேட்டு - செவியுற்று,-நீலம் உண்டு இருண்ட
கண்டன்உம்-நீலநிறமான விஷத்தைப்