பக்கம் எண் :

56பாரதம்ஆரணிய பருவம்

புசித்து அதனாற் கறுத்த ஸ்ரீகண்டத்தையுடைய சிவனும், இரங்கி-
திருவுள்ளம்இரங்கி, (அம்பிகையைநோக்கி),நிரை வளை செம் கையாய்-
வரிசையான வளையல்களையணிந்த சிவந்த கையையுடையவளே! நெடிது
காலம் உண்டு-(அருச்சுனனதுதவம்)நெடுங்காலமாக உள்ளது;(அவன்),
அருள்கூர்-கருணை மிகுந்த, அறத்தின் மைந்தனுக்குஉம் -
தருமபுத்திரனுக்கும், காற்றின் மைந்தனுக்குஉம்-வாயுகுமாரனான வீமனுக்கும்,
நேர் இளையான்-அடுத்த தம்பி;ஞாலம் உண்டவனுக்கு-உலகங்களை
விழுங்கிய ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருவவதாரமாகியகண்ணபிரானுக்கு, உயிர்
என-உயிர்போல, சிறந்தோன்-சிறந்த நண்பன்;நரன் எனும் நாமம்உம்-நரன்
என்கிற பெயரையும், படைத்தோன் - பெற்றவன்;(எ-று.)-இதனால்,
அருச்சுனனைத் தான் இன்னானென்று அறிந்திருத்தலைச் சிவபிரான்
வெளியிட்டனன்.

    விஷத்தை யுட்கொண்ட கண் என்றது - மிகவுங் கறுத்த கருவிழியை
யுடைமையையும், அமுதம் பொழிதருகண் என்றது-அக்கருவிழியைச் சுற்றி
வெண்ணிறமுடைமையையுங் கருதி; இனி, காமநோயை யுண்டாக்கித்
துன்பத்தைத் தருதலால் நஞ்சின் தன்மையை யுட்கொண்டு,
பார்வையழகினால் மிக்க இன்பத்தைத் தருதலால் அமிருதத்தைச் சொரிகின்ற
கண் என்றலுமாம்:  "சேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியும்,
பாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையும், மாலுறுப்ப மகிழ்செய்வ
மாண்பின் நஞ்சு மமிர்தமுமே, போல்குணத்த பொருகயற்கண்
செவியுறப்போந் தகன்றனவே" எனச் சிந்தாமணியிலும், "அமிழ்தினின்
விளர்த்துஉள் நஞ்சினிற்கருகி யையரிசிதறி மைதோய்ந்து, கமலமென் மலரை
வனம் புகுத்திய வேற்கண்"  என நைடதத்திலும் வருதல் காண்க.  இனி,
அமுதம் என்றது-கருணையாகவுமாம்.  நஞ்சும் அமுதுஞ்சேர்த்துச்
சொல்லப்படுதலால், அவை பாற்கடலிற்பிறந்த ஹாலாஹலமும்
தேவாமிருதமுமாம்.  கண்டம் - கழுத்து.  கரியவிஷத்தை யுட்கொண்டு
கண்டத்தில் நிறுத்தினதனால், சிவனுக்கு நீலகண்டனென்று ஒருபெயர்.
நெடிது-குறிப்பு வினையாலணையும்பெயர்.  அருச்சுனன் பாண்டவர்களில்
மூன்றாமவ னென்பது, இங்கு 'அறத்தின் மைந்தனுக்குங் காற்றின்மைந்தனுக்கு
நேரிளையான்' என்றதனால் விளங்கும். பாற்கடல்கடையுங்காலத்து யாவரையுங்
கொல்லுமாறு அதனினின்றுந் தோன்றிய விஷத்தைக் கண்டு அஞ்சியோடின
தேவர்கள் முதலியோரது வேண்டுகோளாற் சிவபிரான் அதனைப் புசித்தருளி
அவர்களைக்காத்தன னென்பது, கதை. பிரமன்முதலான சகல
தேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்தில் ஸ்ரீ
மகாவிஷ்ணு சிறுகுழந்தைவடிவமாய் அண்டங்களை யெல்லாந் தம் வயிற்றில்
அடக்கிவைத்துக்கொண்டு பிரளயப்பெருங்கடலில் ஆலிலையிற்
பள்ளிகொள்ளுகின்றன ரென்று அறிக. உயிரெனச் சிறந்தோன் - பிராண
சிநேகிதன். "மமப்ராணாஹிபாண்டவா:" னானக் கண்ணன் தானே
கூறியுள்ளதற்கு ஏற்ப, 'ஞாலமுண்டவ