பக்கம் எண் :

58பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)பருகும் நீர் துறந்து-குடித்தற்கு உரிய நீரைக் குடிப்பதையும்
விட்டு, காற்றுஉம்-காற்றையும், வெம் வெயில்உம் - உஷ்ணமான
வெயிலையும்,பாதவங்களின்-மரங்களினுடைய, சினைஉதிர்ந்த-
கிளைகளினின்றுந்தாமே சிந்தின, சருகுஉம்ஏ-உலர்ந்த இலைகளையுமே,
ஒழிய-ஒழியவிட்டு, காய் கனி கிழங்குஉம்-காய்கள் பழங்கள்
கிழங்குகளையும்,இனிது அருந்துதல் - இனிமையாக உண்ணுதலை,தான்-,
தவிர்ந்தான்-ஒழிந்தான்: உருகும் மா மனத்தை-(பக்திமிகுதியால்)
உருகுகின்ற பெரிய மனத்தை, நாம் உவந்து இருத்தற்கு உறை பதி ஆக்கி-
நாம் விரும்பிவந்து வீற்றிருப்பதற்குப் பொருந்திய இடமாகச் செய்து,
நம்மிடத்தே-நம்பக்கலிலே, உணர்வை-அறிவை, செருகினான்-
செலுத்தினான்;இவன் போல் செய் தவம் சிறந்தவர் -
இவ்வருச்சுனன்போலத் தவஞ்செய்தலிற் சிறந்தவர்கள், யாவர்ஏ-வேறு
எவருளர்?  என்றான்-என்று(பரமசிவன்)சொல்லியருளினான்;(எ-று.)-
இதனால்,சிவபிரான் அருச்சுனன் தவஞ்செய்தற்சிறப்பைப் பாராட்டி
அவனதுதவத்தை வியக்கின்றன னென்க.

     பற்றுக்களைவிட்டுத்தன்னைத்தியானிக்கும் யோகியரது
உள்ளக்கமலத்தில் கடவுள் மனமகிழ்ந்து வீற்றிருப்ப னென்ற கொள்கைக்கு
ஏற்ப 'மனத்தைநாமுவந்திருத்தற்கு உறைபதியாக்கி'எனப்பட்டது.
உறைபதி - வினைத்தொகை.நீர் காற்று வெயில் சருகு காய் கனி கிழங்கு
ஆகிய இவற்றையெல்லாம் உண்ணுதலொழிந்தானென்று முதலிரண்டடிக்குக்
கருத்து;இனி, நீரையொழித்தும், காய் கனி கிழங்குகளை
உண்ணுதலொழிந்தும், காற்றையும் வெயிலையுஞ்சருகையுமேயுண்டும்
வாழ்கின்றனனென்று பொருள்கொள்ளுதல் ஏற்கும்;மேல் 90-ஆஞ்
செய்யுளில் "முதிர்ந்தசருகுண வொழிய வுணவிலான்" என்றும், 94-ஆஞ்
செய்யுளில் "உதிர்சருகலாலுணவில்லையால்" என்றும் வருதல் காண்க.
உருகுதல்-நீராய்க்கரைதல்.  செய் தவஞ் சிறந்தவர் - செம்மையான தவத்திற்
சிறந்தவருமாம்.                                             (77)

78.-சிவபிரான்பார்வதிதேவியோடு பின்னுஞ் சில கூறத்
தொடங்குதல்.

போகமாய்விரிந்தும் போகியாய்ப்பரந்தும்புலன்களின்
                             வழிமனஞ்செலுத்தா,
யோகியாயிருந்தும்யோகிகண்முதலாமுரைப்பரும்பல
                                  பொருளாயும்,
ஏகமாய்நின்றதத்துவமறைக்குமெட்டுதற்கரியதன்வடி வில்,
பாகாமாய்விளங்கும் பைந்தொடியுடனே பரிவுடன்சின்மொழி
                                     பகர்வான்.

     (இ-ள்.)(பரமசிவன்),போகம் ஆய் - (ஐம்பொறிகளாலும்)
அனுபவிக்கப்படும் பொருள்களின் வடிவமாய், விரிந்துஉம் - பரவியும்,
போகி ஆய்-(அப்பொருள்களை)அநுபவிக்கின்ற பிராணிகளின் உருவமாய்,
பரந்துஉம்-பரவியும், புலன்களின் வழி - ஐம்புலன்களின்வழியே, மனம்
செலுத்தா - (தன்)மனத்தைச் செலுத்தாத, யோகி ஆய்-யோகா நுஷ்டான
நிலையையுடையவனாய்,இருந்