தும்-,யோகிகள் முதல் ஆம்-யோகாப்பியாசஞ் செய்கின்ற முனிவர்கள் முதலாகிய, உரைப்பு அரு-சொல்லமுடியாத, பல பொருள் ஆய்உம்- அனேகபதார்த்தங்களாகியும், ஏகம் ஆய் நின்ற - தனிமையாய் நின்ற, தத்துவம் மறைக்குஉம் எட்டுதற்கு அரிய தன் வடிவில்-உண்மையான வேதங்களுக்கும் எட்டிஅறிவதற்கு அருமையான தனது திருமேனியில், பாகம் ஆய் விளங்கும்-இடப்பக்கமாக இருந்து விளங்குகின்ற, பைந்தொடியுடன்-பசும்பொன் வளையையுடையபார்வதியோடு, பரிவுடன்- அன்புகொண்டு, சில்மொழி-(இன்னுஞ்)சில வார்த்தைகளை,பகர்வான்- சொல்பவரானார்; (எ-று.)-அது, மேல்இரண்டுகவிகளாற் கூறுகிறார்.
'கடவுள்ஒருவனே: சேதனம் அசேதனம் என்னும் யாவும் அப்பெருமானது சரீரம்'என்பது நூற்கொள்கை யாதலால், 'பல பொருளாயும் ஏகமாய்நின்ற தத்துவம்'எனப்பட்டது. அனுபவிக்கும் பொருளும் அனுபவிப்பவனும் தானாய்நின்றும் தான் அவைகளில் யாதும் பற்றில்லாத யோகியாய் நிற்ப னென்றும், அன்றியும், யோகியராயும் நிற்பனென்றும், இவ்வாறு இருந்தும் தனது வடிவத்திற் செம்பாதி பெண்வடிவம் வாய்ந்திருப்பவ னென்றும், கடவுளது விசித்திரசக்தி இந்தச் செய்யுளில் விளக்கப்பட்டது. சின்மொழி-குளிர்ந்தமொழியுமாம். 'முதலாவுரைப்பரு'எனவும் பாடம். (78) 79.-இதுவும்,அடுத்த செய்யுளும்-ஒருதொடர்: சிவபெருமான் மூகாசுரன் வந்திருப்பதைத் தேவிக்குத் தெரிவித்து, அவனைக்கொன்றுஇவனுக்கு வரங்கொடுக்கவேண்டுமென்றது கூறும். கேட்டிநீசெவ்வாய்க்கிளிநிகர்மொழியாய் கிரீடியைத் துணைவர்களுடனே, காட்டிலேயொதுக்கியிளைஞருந்தானுங்கடியவஞ்சனை யினாற்கவர்ந்த, நாட்டிலே வாழ்வோனேவலான்மூகநாமதானவனி வன்றன்னைக், கோட்டிலேகொலைசெயேனமாய்வந்திக்குன்றிடை யின்றுபுக்கனனால். |
(இ-ள்.)செம்வாய்-சிவந்த வாயையும், கிளி நிகர் மொழியாய்- கிளியின்பேச்சை யொத்த (இனிய)சொற்களையுமுடையவளே! நீ-, கேட்டி-(யான்சொல்வதைக்)கேட்பாயாக; கிரீடியை - அருச்சுனனை, துணைவர்களுடன்- உடன்பிறந்தவர்களோடுகூட, காட்டிலே-வனத்திலே, ஒதுக்கி - (வாசஞ்செய்யும்படி)அனுப்பிவிட்டு, இளைஞர்உம்தான்உம்-(தன்) தம்பிமார்களுந் தானுமாக, கடிய வஞ்சனையினால்கவர்ந்த-கொடுமையான சூதாட்டமாகிய வஞ்சனையினாலேஅபகரித்துக்கொண்ட, நாட்டிலே - குருநாட்டிலே, வாழ்வோன் - வாழ்பவனாகியதுரியோதனனுடைய, ஏவலால் - கட்டளையினால்,மூகநாம தானவன்-மூகனென்னும் பெயரையுடைய அசுரன், இவன் தன்னை-இவ்வருச்சுனனை,கோட்டிலே-(தனது)கொம்பிலே, கொலைசெய்-(குத்திக்)கொல்லுவதற்கு உரிய, ஏனம் |