பக்கம் எண் :

6பாரதம்ஆரணிய பருவம்

     சமயத்தில் வந்து உதவுதல்பற்றி, தவப்பயன் கண்ணபிரானுக்கு உவமை;
எவ்வளவோ பெருந்தவஞ்செய்திருந்தாலன்றிக் கண்ணபிரானது வருகை
நேரா தென்றவாறு.  யாதவன்-யதுகுலத்துத் தோன்றியவன்.  யதுஎன்பான்,
சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் குமாரருள் ஒருவன்.  ஏறு-
ஆண்பெயர்.  வெயிலிலடிபட்டவர்க்கே நிழலினருமை தெரியுமென்பது,
இங்குக் கருதத்தக்கது. ஆதவம்-ஆதபம்; நன்றாகத் தபிப்பது. 'ஆதவத்துக்கு
அருநிழல்' என்பதை, "துன்பத்திற்கு யாரே துணையாவார்," "மறத்திற்கு மஃதே
துணை," 'பித்தத்துக்கு இஞ்சி நல்லது' என்பனபோலக் கொள்க. வேதம்
வித்தகன் - வேதத்தினால் அறிதற்கு உரியவன் எனினுமாம். வேதம்
என்பதற்கு - நன்மை தீமைகளை விதிவிலக்குக்களால் அறிவிப்பது என்பது
அவயவப் பொருள். வீரனும், உம்-இறந்தது தழுவியது.                 (6)

7.-தருமனிடத்து வந்தவர் அன்போடு
கூறத்தொடங்குதல்.

பாரிழந்தவிப் பாதகச்சூதுகேட்டு
ஈருநெஞ்சின ரேமுறுநோக்கினர்
பேரறன்றரு பிள்ளையைப்பார்த்தருள்
கூரவன்பொ டிவையிவைகூறுவார்.

     (இ-ள்.) பார் இழந்த-(பாண்டவர்கள்) பூமியை இழப்பதற்குக் காரணமான,
இ பாதகம் சூது-பாவத்தைத் தருவதான இந்தச் சூதாட்டம் நடந்த செய்தியை,
கேட்டு - செவியுற்று, ஈரும் நெஞ்சினர் - பிளந்த மனமுடையவர்களும், ஏம்
உறு நோக்கினர் - வருத்தம் மிகுந்த பார்வையுடைவர்களுமாகிய
துருபதன்முதலிய பந்துக்களும் சினேகிதர்களும்,--பேர் அறன் தரு
பிள்ளையை பார்த்து - பெருமையையுடைய தருமக்கடவுள் தந்த குமாரனாகிய
யுதிட்டிரனை நோக்கி, அருள் கூர - கருணைமிக, அன்பொடு - அன்புடனே,
இவை இவை கூறுவார் - இந்த இந்த வார்த்தைகளைச் சொல்வாரானார்கள்;
(எ - று.) -அவற்றை, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார்.

     அறன் - அறத்திற்குஉரிய கடவுள்: யமன்.  தருமபுத்திரன்
யமதேவனது அருளாற் குந்திதேவியினிடம் பிறந்தவ னாதலால், அவனை
"அறன்றருபிள்ளை'என்றது: இனி, இத்தொடர் - தருமத்தைச் செய்கின்ற
பிள்ளையென்றும் பொருள்படும்.  பிள்ளை - இளமைப் பெயர்: இங்கு,
உயர்திணைக்கு வந்தது.  வன்பொடு என்று பிரித்து, வீரத்தோடு எனினுமாம்.
இழந்த என்னும் பெயரெச்சம், காரியப்பொருளது.  'நோய்தீர்ந்த மருந்து'
என்பது போல.  ஏமுறுதல்=ஏமமுறுதல்; ஏமம் என்பதற்கு - களிப்பு என்றும்
பொருளுண்டு.  அருளாவது - ஒருசம்பந்தமு மில்லாமலே இயல்பாக
எல்லாவுயிர்களின்மேலுஞ் செல்லுங் கருணையென்றும், அன்பாவது-
மனைவியும் மக்களும் முதலிய பந்துக்க