ஆய்-பன்றியினுருவமாகி, இன்று - இன்றைத்தினத்தில், இகுன்றிடை- இம்மலையிலே,வந்து புக்கனன் - வந்துசேர்ந்தான்;(எ-று.)-ஆல்-ஈற்றிசை. தனதுஉடன்பிறந்த முறையாரான பாண்டவர்களைக்காட்டிலே ஓட்டிவிட்டுத் தானும் தன் தம்பியருமாக இனிது வாழ்கின்ற துரியோதனன் காட்டிலும் பாண்டவர் உயிரோடிருத்தலைப்பொறாமல்மூகனென்று பேர்படைத்த தனதுநண்பனானஅசுரனையேவ,அவ்வசுரன் இந்த அருச்சுனனைக்கோட்டினாற்குத்திக் கொலைசெய்யக்கருதிப் பன்றியுருவொடு இப்போது இம்மலையிற்புகுந்திருக்கின்றானென்று சிவபெருமான் பார்வதீதேவியினிடம் கூறுகின்றன னென்க. செவ்வாய்க்கிளிநிகர்மொழியாய் என்பதற்கு-கிளியின் மூக்கை ஒத்துச் சிவந்த வாயையும் அதன் மொழியையொத்துக் கேட்டற்கு மிக இனிய மொழியையும் உடையவளே எனவும் உரைக்கலாம். கிரீடி-கிரீடமுடையவன்: இந்திரன் அருச்சுனனைத்தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது அங்குத் தன்னாசனத்தில்அருத்தாசனங்கொடுத்து அதில் உட்காருவித்துப் பிரமதேவன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச் சூட்டுவதனால், இவனுக்குக் கிரீடியெனப் பெயர்: இப்பெயர் இவ்வரலாற்றுக்குப் பின்பு அருச்சுனனுக்கு வருவதாயினும், கவி, பிற்காலத்தவராதலால் அப்பெயரைப் பெறுவதற்குஉரியவனென்னுங் கருத்தால், இங்கே 'கிரீடி'என்றார்: அன்றியும், பரமசிவன் முற்றுமறிந்தவராதலால் எதிர்காலத்தில் நிகழ்வதை முன்னமே தெரிந்துகூறினாரென்றுங் கொள்க. ஒதுக்கி வாழ்வோனென்க. கோடு என்றது, வெளியில் வளர்ந்துவந்திருக்குங் கோரதந்தத்தை. (79) 80. | மற்றவன்விரைவினுடனமர்மலைந்துவாசவன்மதலையை வதைத்து, நற்றவமகற்றுமுன்னமேவிரைந்து நாமுயிர்கவருதல் வேண்டும், கொற்றவன்மதலைகேட்டனவரங்கள்கொடுத்தலும் வேண்டு மென்றெழுந்தான், கற்றவர்வளைத்துத்திரிபுரமெரித்தோன்கற்றவர் கருத்தினாற்காண்போன். |
(இ-ள்.) அவன்-அம்மூகாசுரன், விரைவினுடன்-சீக்கிரமாக, அமர் மலைந்து-போர்செய்து,வாசவன் மதலையை-இந்திரகுமாரனான அருச்சுனனை,வதைத்து-கொன்று, நல் தவம் அகற்றும் முன்னம்ஏ- (அவனது)சிறந்த தவத்தை நீக்குவதற்கு முன்னாகவே,விரைந்து-சீக்கிரமாய், நாம்-,உயிர் கவருதல் வேண்டும்-அவ்வசுரனுயிரைப் போக்கவேண்டும்; (அன்றியும்),கொற்றவன் மதலை-அவ்விராசகுமாரனானஅருச்சுனன், கேட்டன வரங்கள்-கேட்பவையாகியவரங்களை,கொடுத்தலும் வேண்டும்- கொடுப்பதும் வேண்டும், என்று-என்று (அம்பிகையோடு)சொல்லி,-கல் தவர் வளைத்துதிரிபுரம் எரித்தோன் - (மேரு)மலையாகியவில்லை வளைத்துச்சென்று மூன்றுபட்டணங்களையும்எரித்து அழித்தவனும், கற்றவர் கருத்தினால்காண்போன்-படித்தவரெல்லாராலும்(தமது) |