பக்கம் எண் :

68பாரதம்ஆரணிய பருவம்

                                      னொருவில்வாங்கி,
முதிர்ந்தசினத்துடனெய்தான் முகம்புதைய வக்கணைக்கு
                                       முன்னேயண்டம்,
பிதிர்ந்திடவின்னாணெறிந்துவேடனத னபராங்கம்பிளக்கவெய்தான்.

     (இ-ள்.)நாள்உம் - தினந்தோறும், உதிர்ந்த சருகு உணவு ஒழிய -
(மரங்களினின்று)சிந்தின உலர்ந்த இலைகளைஉண்ணுவதே யல்லாமல்,
உணவு இலான் - வேறு உணவில்லாத அருச்சுனன்,-அதிர்ந்துவரு -
(தன்மேல்)ஆரவாரித்துவருகின்ற, கேழலை- பன்றியை, கண்டு - பார்த்து,
அரு தவத்தை அழிக்கும் என - (தனது)அருமையான தவத்தை (இது)
கெடுக்குமென்று நினைத்து,அஞ்சி - பயந்து, விரைவினில் - சீக்கிரமாக,
தன் ஒரு வில் வாங்கி - தனது ஒப்பற்ற (காண்டீவமென்னும்)வில்லை
வளைத்து,முதிர்ந்த சினத்துடன் - மிகுந்த கோபத்துடனே, முகம் புதைய -
(அப்பன்றியின்)முகத்திலே தைக்கும்படி, எய்தான் - அம்பெய்தான்;
வேடன் - வேடரூபங்கொண்ட சிவபிரான், அண்டம் பிதிர்ந்திட -
(ஓசையின்மிகுதியால்உண்டான அதிர்ச்சியால்)உலக வுருண்டை
வெடிக்கும்படி, வில் நாண் எறிந்து - வில்லினது நாணியைக் கைவிரலால்
தெறித்து (க்குணத்தொனிசெய்து),அ கணைக்குமுன்ஏ -
அவ்வருச்சுனனம்புக்கு முன்னே, அதன் அபராங்கம் பிளக்க -
அப்பன்றியின் பின்பக்கம் பிளக்கும்படி, எய்தான் - (ஒருபாணத்தைப்)
பிரயோகித்தான்;(எ-று.)

     நாளும், உம்மை -தொறுப்பொருளது.  அபரஅங்கம் - பின்னாகிய
உறுப்பு.  அபராங்கமென்பதன் எதிர்மொழி - பூர்வாங்கம் என்பது.
சருகுணவொழிய வுணவிலான் என்பதற்கு - சருகாகிய உணவையும்
ஒழியவிட்டு வேறே ஓர் உணவு மில்லாதவ னென்று உரைப்பாருமுளர்.  (90)    

91.-அருச்சுனனுடன்வேடர்கள் சண்டைக்கு வருதல்.

இருவருமேவியவாளியுடனேபட்டுடலுருவியேனம்வீழ
வெருவருமாறடவியெலாந்தடவிவருவெஞ்சிலைக்கைவேடன்
                                         சேனை
ஒருவன்முதலெய்திருக்கவவ்விலக்கைநீ யெய்ததுரனோவென்று
பொருவருமாதவம்புரியும் புருகூதன் மதலையுடன்பூசலிட்டார்.

     (இ-ள்.)இருவர்உம்-வேடனும் அருச்சுனனும், ஏவிய-எய்த, வாளி-
அம்புகளிரண்டும், உடனே - ஒரு காலத்திலே, பட்டு - தைத்து, உடல்
உருவி - உடம்பைத் துளைத்ததனால்,ஏனம் - பன்றி, வீழ-இறந்து விழ,
வெருவரும் ஆறு - (கண்டபிராணிகள்)அஞ்சும்படி, அடவி எலாம் -
காடுமுழுவதிலும், தடவிவரு - (பன்றியைத்)தேடிவந்த, வெம் சிலைகை
வேடன் - கொடியவில்லைத்தரித்த கையையுடைய வேடனது, சேனை-
சேனையிலுள்ளவேடர்களெல்லாம், (அருச்சுனனைநோக்கி),'ஒருவன்
முதல் எய்து இருக்க - ஒருத்தன் முன்னே (குறியாகக்கொண்டு
பாணத்தைப்)பிரயோகித்திருக்க, அ இலக்கை - அந்தக்குறியையே, நீ
எய்தது - நீ அம்பெய்து துளைத்தது,உரன்ஓ-வலிமைச்செருக்கோ',என்று-