என்றுசொல்லிக்கொண்டு, பொருவு அரு மா தவம் புரியும் - ஒப்பில்லாத பெரிய தவத்தைச் செய்கின்ற, புருகூதன் மதலையுடன்- இந்திரகுமாரனான அவனுடனே, பூசல் இட்டார்-சண்டைசெய்யத் தொடங்கினார்கள்;(எ-று.) உருவி -காரணப்பொருளதாகிய உருவ என்னுஞ் செயவெனெச்சத்தின் திரிபு;இது - வேறு கருத்தாவின் வினையாகியவீழ என்பதைக் கொண்டது. சேனை- இடவாகுபெயர். இலக்கு-லக்ஷ்யம் என்னும் வடமொழியின் திரிபு. புருகூதன் - மிக்க [நூறான]யாகங்களைச்செய்தவன்: யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவனென்றும் உரைப்பர். பூசல் - பேராரவாரமுமாம். உரன் - மகர னகரம்மாறிவருஞ்சொல். இலக்கை யென்ற விடத்து, விலங்கையென்றும் பாடம். (91) வேறு. 92.-அருச்சுனன்சிவபிரானோடு சொல்லத் தொடங்குதல் புராதனாகமவேத கீதபு ராண ரூபமொ ழித்துவெங் கிராதனாகியவடிவு கொண்டகி ரீச னோடுரைசெய்குவான் விராதனாதிநிசாச ரேசரை வென்று முச்சிக ரத்தின்மேல் இராதவாறட லமர்பு ரிந்தவி ராம னேநிக ரேவினான். |
(இ-ள்.)விராதன் ஆதி-விராதன் முதலான, நிசாசர ஈசரை-இராக்கதத் தலைவர்களை,வென்று-சயித்து, முச்சிகரத்தின்மேல் இராத ஆறு-மூன்று சிகரங்களையுடையதிரிகூடகிரியில் இல்லாதபடி, அடல் அமர்புரிந்த-கொடிய போரைச் செய்த, இராமன்ஏ-தசரதராமனையே,நிகர்-ஒத்த, ஏவினான்- அம்பின் தொழிலையுடைய அருச்சுனன்,-புராதனம்-பழமையான,ஆகமம் - ஆகமங்களினாலும்,வேதம்-வேதங்களினாலும்,கீதம் - சிறப்பித்துச் சொல்லப்படுகிற, புராணம் - பழமையான, ரூபம்-(தனதுநிஜ)ரூபத்தை, ஒழித்து-நீக்கி, வெம் கிராதன் ஆகிய வடிவுகொண்ட- கொடிய வேடனாகிய ரூபத்தை எடுத்துக்கொண்ட, கிரி ஈசனோடு-கைலாசமலைக்குத்தலைவனான சிவனுடனே, உரை செய்குவான்-சொல்வானானான்;(எ-று.)-அதனை, மேலிரண்டு கவிகளாற் கூறுகின்றார். தனதுநிஜவடிவமொழித்து வேடவடிவுகொண்டு வந்த சிவபிரானை இன்னானென்றுஉணராத அருச்சுனன் பின்வருமாறு கூறலாயின னென்க. 'புராதனாகமவேதகீதபுராணரூபமொழித்து வெங்கிராதனாகியவடிவுகொண்ட கிரீசன்'என்பதனால்,கடவுள் தன்னைச்சரணமடைந்தவரைப் பாதுகாத்தற்பொருட்டுத் தன்னைஅழியமாறியும் வந்து திருவருள்புரிவனென்பது பெறப்படும். அருச்சுனன், நிவாதகவசர் காலகேயர் முதலிய அசுரவர்க்கங்களையெல்லாம்ஒழித்துப் பூமிபாரத்தை நிவர்த்திசெய்யப் போவதைத்தோற்றுவாய் செய்யுமாறு இங்கு அரக்கரைப் பூண்டோடு ஒழித்துத் தருமத்தை நிலைகாட்டியஇராமமூர்த்தியை அவனுக்கு |