பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்71

நீபின்னால்விட்ட அம்பு, சிரத்திடை - (அதன்)தலையிலே, உருவும் ஆறு-
துளையுண்டாம்படி, பிளந்தது-;ஆல்-ஆதலால், இ படிவன்பொடு
புகலுகின்றது-(நீ)இவ்வாறு கொடுமையாகச் சொல்லுகிறது, வன்மைஓ -
தேகபலத்தாலோ?  திறல் வின்மைஓ - வலிய வில்லின்தொழில்
வல்லமையாலோ? இதன் உடலில் - இப்பன்றியினது உடம்பிலே, என் பெயர்
பொறி ஏவு பார்-எனது பெயரை அடையாளமாக மேலே எழுதியுள்ள அம்பு
தைத்த இடத்தைப் பார்;நீ விடும் ஏவு பார்-நீ எய்த அம்பு தைத்த
இடத்தையும் பார்;

     செத்த பாம்பை அடிப்பதுபோல, வேறொருவன் இலக்காக எய்து
கொன்றதை யான் எய்பவனல்லேன்;இது, என்னைக்கொல்ல வருவது
தெரிந்து நான் முதலில் இதனை எய்தேன்;ஒருகால் நான் எய்ததை நீ
உணராமலிருக்கலாம்; நீயோ நான் எய்தபின்பே இந்தப் பன்றியைப்
பின்புறத்திலிருந்து முகத்தைத் துளைத்துப் போகும்படி அம்புஎய்தாய்;
எய்ததும் இதோ தனியே தெரிகின்றது.  இப்படியிருக்க, வீணாகச்
சண்டையிடுவானேன்?  நீங்கள் சண்டையிடுவதற்குக் காரணம் வில்லில்
நாம்தாம் வல்லவரென்ற கருத்தா?  அல்லது நம்மினும் விஞ்சிய பலசாலிகள்
வேறு இல்லை யென்ற கருத்தா?  வில்வல்லமையிலும் சரி,
உடல்வலிமையிலும் சரி, நான்  உங்கட்குப் பின்வாங்குபவனல்லேனென்று
அருச்சுனன் வேடனாகிவந்த சிவபிரானோடு கூறினனென்பதாம்.
சிவபிரானது அம்பே முன் எய்யப் பெற்றதென்பதை மறுக்க, 'முன்புவிட்ட
என் வாளி, நீ பின்பு விட்ட சரம்'என்று கூறினான்.  முதலடிகளில் முன்பு
பின்பு என்று மாறுபட்ட சொற்கள் வந்தது - முரண்தொடை.  ஏ என்னும்
பெயர்ச்சொல், உகரச்சாரியை பெற்று 'ஏவு'
எனநின்றது.  ஓகாரங்கள்-
வினாவோடு ஐயப்பொருளன.                               (93)

94.-எனக்கருந்தவமுயறலாலுதிர்சருகலா லுணவில்லையால்,
உனக்குமுன்படைவேடருக்குநல்லுண்டியாமிதுகொண்டுபோ,
வனக்குறும்பொறைநாடவுன்படைவலிமைகொண்டு
                                    வழக்கறச்,
சினக்கில் வெங்கணைவிடுவன்யானுயர்திசைதொறுந்தலை
                                     சிந்தவே.

     (இ-ள்.)வனம் - காடுகளினாற்சூழ்ந்த, பொறை - மலையிடமாகிய,
குறு நாட-சிறிய நாட்டுக்குத் தலைவனாகிய வேடனே!-அரு தவம்
முயறலால்-(யான்)அருமையான தவத்தைச் செய்தலினால், எனக்கு-,உதிர்
சருகு அலால்-உதிர்ந்த சருகே யல்லாமல், உணவு இல்லை-வேறு போஜனம்
இல்லை;ஆல் - ஆதலால், இது-இப்பன்றி, உனக்கும்-,உன் படை
வேடருக்குஉம்-உனது சேனையிலுள்ள வேடர்களுக்கும், நல் உண்டி ஆம் -
நல்லஉணவாகும்;(ஆதலால்),(இதனை),கொண்டுபோ-
எடுத்துக்கொண்டுபோ;உன் படை வலிமைகொண்டு-உனது சேனை அல்லது
ஆயுதங்களின் பலத்தைக்கொண்டு, வழக்கு அற - நியாயமில்லாமல்,
சினக்கில்-கோபித்தால், உயர் திசைதொறுஉம்-உயர்ந்த திக்குக்களிலெல்லாம்,
தலை சிந்த -  (உங்களுடைய) தலை சிதறும்படி,யான்-, வெம் கணை
விடுவன் - கொடிய அம்புகளை எய்வேன்;(எ-று.)