துப்பொறாமல், அவன் தட கை விரல்உம் கொண்டாய் - அவனது பெரிய கையிலுள்ள விரலொன்றையும் வாங்கினாய்: (அன்றியும்), அன்று- முன்னொருகாலத்தில், ஒரு முனிவன் வார்த்தை கேட்டு - அந்தணனொருவன் முறையிட்ட வார்த்தையைக் கேட்டு, பல்வேடுவரை - பல வேடர்களை, பிறைவாய் அம்பால் - பிறைச்சந்திரன் போன்ற நுனியையுடைய அம்புகளினால், பேறு அற-(உனக்கு) ஒரு பயனுமில்லாமல், பிளந்தனை - பிளந்திட்டாய்; (எ-று.) சிவபெருமானாகிய வேடுவன் 'நீசிறுபிராயம்முதல் வில்வித்தையில் நம்மில் மிக்கவரில்லையென்ற செருக்குக் கொண்டவன்'என்று அருச்சுனனைப் பழித்தற்காக, துருபதனைத் தேர்க்காலிற் கட்டிக்கொணர்ந்த செய்தியைக் கூறிவிட்டு, இனி வேட்டுவ சாதியார்க்கு அவன் செய்துள்ள தவறுகளை யெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன னென்க. ஐவர் - தொகைக்குறிப்பு. வீறிய - குறிப்புப்பெயரெச்சம். வின்மை, மை - தன்மைப்பொருள்விகுதி. பிறைவாயம்பு - அர்த்த சந்திரபாணம். அந்தணன் முறையீட்டிற்கு ஏற்பக் கவர்ந்த ஆநிரைகளை மீட்டுக்கொடுத்தலே தகுதியாயிருக்கக் கவர்ந்தவர்களைக் கொன்றது பயனற்றசெயலென்பான் 'பேறற'என்றான். இக்கவியின் பின்னிரண்டடிகளாலும் மேற்கவியாலும், வேடர்களுக்கும் அருச்சுனனுக்கும் பழைமையாகப் பகையுள்ளதென்று எடுத்துக் கூறுகிறான். துருபதனைத் தேரிற்கட்டிக் குருதக்கிணையாக் கொடுத்த கதை: அங்கிவேசமுனிவரிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக் கற்றுவந்தபொழுது 'எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப் பாதி உமக்குப் பங்கிட்டுக் கொடுப்பேன்' என்று அவர்க்கு வாக்குத்தத்தஞ்செய்திருந்த பாஞ்சாலவரசனாகிய துருபதன், பின் அவர் தங்குழந்தைக்குப் பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன்போல நீயாரென்று வினவிச் சிலபரிகாசவார்த்தைகளைச் சொல்லிப் பங்கப்படுத்த, அப்பொழுது அவர் 'என்மாணாக்கனாகிய அரச குமாரனொருவனைக்கொண்டு உன்னை வென்று கட்டிக்கொணரச் செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்' என்று சபதஞ்செய்து வந்து, பின்பு கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் வில்வித்தைகளைக் கற்றுக்கொடுத்து முடிவில் 'துருபதனைவென்று உயிருடன் கட்டிக் கொணர்வதே எனக்குக் கொடுக்கவேண்டுங் குருதக்ஷிணை' என்று சொல்ல, கௌரவர்களால் ஆகாமற் போகவே, அருச்சுனன் சென்று அங்ஙனமேசெய்து குருவின் பிரதிஜ்ஞையை நிறைவேற்றினா னென்பது. வேடன் தடக்கைவிரல்கொண்ட கதை:-ஏகலவ்யனென்று ஒரு வேடன் துரோணரை அடுத்துத் தனக்கு வில்வித்தைகற்றுக் கொடுக்கவேண்டுமென்று கேட்க, அவர் அரசகுமாரர்களுக்குத் தாம் பயிற்றிவருவதனால் தமக்குப் பொழுதில்லையென்று சொல்லிவிட, அவன் வனத்திற்சென்று தன்குடிசையில் துரோணரைப் |