பக்கம் எண் :

76பாரதம்ஆரணிய பருவம்

போன்ற உருவம் அமைத்துப் பிராணப்பிரதிஷ்டை பண்ணி அதனிடத்தே
மிகுந்தபக்திசெய்து அந்தக் குருபக்தியின்மிகுதியினால் அவருக்குத்
தெரியாமலே வில்வித்தைமுழுவதையும் அருச்சுனனை யொப்பக்
கற்றறிந்துவர, அதனை ஒருநாள் அறிந்த அருச்சுனன், துரோணரைக்கொண்டு
அவனது வலக்கைப்பெருவிரலைக் குருதக்ஷிணையாக வாங்குவித்தானென்பது.
இதனை "ஏகலைவனென்றொருகிராதன் முனியைத் தனியிறைஞ்சி
யிவனேவலின் வழா, னாகலையடைந்து மிகுபத்தியொடு நாடொறுமருச்சுனனை
யொத்து வருவான், மேகலைநெடுங்கடல் வளைந்த தரணிக்கணொரு
வில்லியென வின்மையுடையான், மாகலைநிறைந்துகுருதக்கிணை
வலக்கையினில்வல்விரல் வழங்கியுளனால்" என்பதனால் அறிக.

     பல்வேடுவரைப் பிறைவாயம்பாற் பிளந்த கதை:-பாண்டவர்
இந்திரபிரத்தத்திலிருந்து அராசளுகையில் ஒருநாள் பிராமணனொருவன்
வந்து தனதுபசுக்களை வேடர்கள் கொள்ளை கொண்டார்களென்று
முறையிட, அருச்சுனன் வில்லெடுத்துச் சென்று பொருது
வேடர்களைக்கொன்று பசுக்களை மீட்டுக் கொடுத்தானென்பது.    (97)

98.கன்றிவருகனற்கடவுள்கையிற்றேருங் காண்டீவக்கார்முக
                          முங்கணையும்வாங்கி,
ஒன்றுபடக்காண்டவக்கானெரித்த நாளிலோருயிர்போற்
                        பலயோனியுயிருமாட்டிக்,
குன்றுதொறுங்குன்றுதொறுமிருந்தவேடக்குழாமனைத்து
                      நீறுபடக்கொன்றாயென்பர்,
இன்றுமெனைமுகநோக்கிவன்மை வின்மையிரண்டுக்கு
                    மன்னவநீயிகழ்ந்திட் டாயே.

     (இ-ள்.)மன்னவ-அரசனே! நீ-,கன்றி வரு - (பசிநோயால்)
வருந்திவந்த, கனல்கடவுள் - அக்கினி பகவானுடைய, கையில் -
கையினின்றும், தேர்உம்-தேரையும், காண்டீவம் கார் முகம்உம்-
காண்டீவமென்னும்வில்லையும், கணைஉம்-அம்புகளையும், வாங்கி -
பெற்றுக் கொண்டு, காண்டவம்கான்-காண்டவ மென்னும் வனத்தை,
ஒன்றுபட-ஒருங்கே, எரித்த நாளில்-(அவ்வக்கினியைக்கொண்டு)
தகித்தகாலத்தில், ஓர் உயிர்போல்-ஒருஉயிரைப் போலவே, பலயோனி
உயிர்உம்-பலவகைப்பட்ட பிறப்புகளிற்பிறந்த உயிர்களையெல்லாம், மாட்டி-
கொன்று, குன்றுதொறுஉம் குன்றுதொறுஉம் இருந்த - (அவ்வனத்தில்)
மலைகள்தோறும் இருந்த, வேடர்குழாம் அனைத்தும்-வேடர்களுடைய
கூட்டங்கள் முழுமையும், நீறுபட-சாம்பராம்படி, கொன்றாய்-,என்பர்-என்று
(யாவருஞ்)சொல்லுவார்கள்: இன்றுஉம்-இன்றைக்கும், எனை-என்னை,
முகம் நோக்கி - முகத்தைப்பார்த்து, வன்மை வின்மை இரண்டுக்குஉம்-
தேகபலம் வில்லின்திறமை என்கிற இரண்டு வகையிலும், இகழ்ந்திட்டாய்-
நிந்தித்துப்பேசினாய்;(எ-று.)

     கீழ்க்கூறியபடி ஏகலைவன் முதலியோரை இம்சித்ததோடு நில்லாமல்
காண்டவதகன காலத்திலும் பலவேடுவர்களைக் கொன்றாய்;இவ்வாறு உன்
செயலைப் பலர்சொல்ல முன்பு செவி