பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்77

யினாற் கேட்டிருந்தேன்;நீ என்னை இன்று இகழ்ந்து கூறியதைக்
கண்கூடாகக்கண்டே னென்று சிவவேடுவன் அருச்சுனனது வேட்டுவப்
பகைமையை ஆதியோடந்தமாக மூதலித்துக்காட்டினனென்க.  மாட்டுதல்-
மாள்வித்தல்.  குன்று தொறும் குன்றுதொறும் என வந்த இரண்டனுள்,
முதலதுக்கு-அழியும்பொழுதெல்லாமென்றும் பொருள்கொள்ளலாம்.  இன்றும்
என்ற உம்மை-முன்பலசமயங்களில் வேடர்களுக்குஅபகாரஞ் செய்தது
அல்லாமல் என்னும் பொருளைத் தந்ததனால், இறந்தது தழுவியது.
பலயோனிஉயிர்-அசுரர், வேடர், மிருகங்கள், பக்ஷிகள் முதலியன.
காண்டவன்-என்று இந்திரனுக்குப் பெயரிருத்தலால், இந்திரனது
காவற்காட்டை   'காண்டவக்கான்'என்றார்.

     காண்டவக்கா னெரித்த கதை:-இந்திரப்பிரத்த நகரத்தைச்
சார்ந்ததொரு பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும்உல்லாசமாக
வசித்திருக்கையில் ஒருநாள் அக்கினிபகவான் அந்தணவடிவங் கொண்டுவந்து,
'எனக்கு மிகப்பசிக்கின்றது, உணவிடுக' என்று வேண்ட அவ்விருவரும் 'நீ
வேண்டியபடி உணவிடுவோம்' என்று வாக்குத்தத்தஞ்செய்ய, உடனே
தீக்கடவுள் நிஜவடிவங்கொண்டு 'இந்திரனதுகாவற்காடாய் யாவர்க்கும் அழிக்க
வொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கிற காண்டவவனத்தை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்' என்ன, அவர்கள் இசைந்து
'நீ இதனைப் புசி' என்றவுடனே, அக்கினிதேவன் அருச்சுனனுக்கு
நான்குவெள்ளைக் குதிரைகள்பூட்டிய தேரையும் குரங்குவடிவமெழுதிய
துவசத்தையும் காண்டீவமென்னும் வில்லையும் இரண்டு
அக்ஷயதூணீரங்களையும் கொடுத்துக்காண்டவவனத்திற் பற்றி யெரிகையில்,
அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளையெல்லாம் அருச்சுனன்
அம்பெய்து கொன்று அத்தழலில் வீழ்த்திக்கொண்டிருக்க, அதனையுணர்ந்த
இந்திரன் அத்தீயை யவிக்கும்படி மேகங்களை யேவ, அச்சோனைமாரியில்
ஒருதுளியும் அக்கினியில் விழாதபடி தடுத்துத் தேவசேனையோடும்
போருக்குவந்த இந்திரனை அருச்சுனன் வென்றனனாக, அக்கினி
அவ்வனமுழுவதையும் எரித்துத் திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை
வாழ்த்திச் சென்றனனென்பதாம்.

99.-சிவவேடன்போருக்கு அழைக்க, அருச்சுனன் போர்
தொடங்குதல்.

மல்லுக்கும் புயவலிக்குங்கலக்குறாத மனவலிக்குமறையுடன்
                               போர்வாளியேவும்,
வில்லுக்குமுனின் மிகுத்தார் மண்மேலுண்டோவிசயனெனும்
                          பெயர்க்குரியவிசயத்தாலே,
சொல்லுக்கு விடேனின்று நீயுநானுந்தோள்வலியுஞ்
                    சிலைவலியுங்காண்டல் வேண்டும்,
கல்லுக்குநிகர்மனத்தாயென்றானந்தக் காளையும்வில்
               வளைத்தொருவெங்கணைமேல்விட்டான்.

     (இ-ள்.)கல்லுக்கு நிகர் மனத்தாய் - (இரக்கமில்லாமையாற்)
கல்லுக்குஒப்பான மனத்தையுடையவனே! விசயன் எனும்