பக்கம் எண் :

78பாரதம்ஆரணிய பருவம்

பெயர்க்கு உரிய விசயத்தால் - விஜயனென்கிற பெயரை அடைவதற்குரிய
விசேஷமான ஜயத்தினாலே, மல்லுக்குஉம் - மற்போருக்கும், புயம்
வலிக்கும்உம்-தோள்களின் பலத்துக்கும், கலக்கு உறாத மனம் வலிக்குஉம் -
(எப்பொழுதுங்)கலங்குதலையடையாத மனத்தின் பலமான தைரியத்துக்கும்,
போர் வாளி மறையுடன் ஏவும் வில்லுக்குஉம் - யுத்தத்திற்கு உரிய
அம்புகளை மந்திரங்களுடனே பிரயோகிக்கின்ற வில்வித்தைக்கும், உனில்
மிகுத்தார் - உன்னிலும் மேம்பட்டவர், மண்மேல் - பூமியில்மேல், உண்டுஓ
- உளரோ?  [எவரும்இலர்போலும்];சொல்லுக்குவிடேன் - (நீ)சொன்ன
வார்த்தைக்காக(ப்பயந்து)விட்டுவிடமாட்டேன்;இன்று-இப்பொழுது, நீஉம்
நான்உம்-நாமிருவரும், தோள் வலிஉம் - புஜபலத்தையும், சிலை வலிஉம்-
வில்லின் வலிமையையும், காண்டல் வேண்டும் - (நேராகப்)
பார்க்கவேண்டும், என்றான் - என்று (வேடன்)சொன்னான்;அந்த
காளைஉம்-இடபம்போன்ற வீரனான அவ்வருச்சுனனும், வில்வளைத்து-
வில்லை வணக்கி, ஒருவெம் கணை-கொடியதொரு அம்பை, மேல்-
(வேடன்)மேலே,விட்டான்-எய்தான்;

     'மனவலியும்தோள்வலியும் நமக்குத்தான் உள்ளதென்றும், இப்படி
யாவற்றினும் மேம்பட்டு வெற்றியையடைவதால்தான் விஜயனென்ற பேர்
நமக்குள்ளதென்றும் கருதி நீ செருக்குகின்றாய்;மருளுமாறு நீ கூறிய
சொல்லுக்கு அஞ்சிப் பின்னிடேன்;உன்தோள்வலிமையையும் வில்
வலிமையையும் பார்ப்போம்'என்று சிவவேடன் கூறவே, அருச்சுனனும் ஓர்
அம்புதொடுத்து அந்த வேட்டுவன் மேல் எய்தன னென்பதாம்.  மல் -
ஆயுதமில்லாமற் கைமுதலிய உறுப்புக்களினால் தேகவலிமையைக் கொண்டு
செய்யும்போர்.  முதலிரண்டடியும்-அருச்சுனனது கருத்தைக் கூறியவாறாம்;
அன்றி, பரிகாசமாகச் சொன்ன தெனினுமாம். 'சொல்லுக்கு'என்றது-
"வனக்குறும்பொறைநாடவுன்படை வலிமைகொண்டு வழக்கறச், சினக்கில்
வெங்கணை விடுவன்யானுயர் திசைதொறுந் தலைசிந்தவே"என்ற
அருச்சுனன் வார்த்தையை.                                (99)

100.-இதுமுதல்ஆறுகவிகள் - அருச்சுனனுக்கும் சிவ
வேடனுக்கும் நிகழ்ந்த போரைக் கூறும்.

விட்டகொடுங் கணையையொரு கணையால் வேடன் விலக்கி
                      வரிசிலைக்குரியவீரன்றன்மேல்,
தொட்டனனோரிரண்டுகணை யவைபோய்மார்புந்
            தோளுமுடன்றுளைத்தனவாற்றுளைத்தபோது,
கட்டழலினிடைநின்றகாளைமீளக் கடுங்கணைகளொருமூன்று
                                   கடிதின்வாங்கி,
வட்டநெடும் பீலியணிமுடியுமார்பும் வாகுவுமே
                       யிலக்காகவலியொ டெய்தான்.

     (இ-ள்.) விட்ட கொடு கணையை - (அருச்சுனன்) எய்த கொடுமையான
ஒரு அம்பை, வேடன்-சிவவேடன், ஒரு கணையால் விலக்கி - ஓரம்பினால்
தடுத்து, வரி சிலைக்கு உரிய வீரன்தன்மேல்-