கட்டமைந்த விற்போருக்கு உரிய வீரனாகிய அருச்சுனன்மேல், ஓர் இரண்டு கணை தொட்டனன் - ஒப்பற்ற இரண்டுபாணங்களைத் தொடுத்தான்;அவை- அவ்விரண்டும், போய் - சென்று, மார்புஉம் தோள்உம் - (அருச்சுனனுடைய)மார்பையுந் தோளையும், உடன் - உடனே, துளைத்தன - ஊடுருவின;துளைத்த போது - அவ்வாறு செய்தபொழுது, கட்டு அழலின் இடை நின்ற காளை - மிகுந்த நெருப்பின் நடுவிலே நின்று தவஞ்செய்த அருச்சுனன், மீள - மறுபடியும், கடு கணைகள் ஒரு மூன்று - கொடுமையான ஒப்பற்ற மூன்று அம்புகளை, கடிதின் வாங்கி - விரைவாக எடுத்து, நெடு பீலி வட்டம் அணி முடிஉம் - நீண்ட மயிலிறகின் மாலையை வட்டமாகச் சுற்றிலும் அணிந்த (சிவனது)சிரசும், மார்புஉம்-,வாகுஉம்ஏ - தோளும் ஆகிய மூன்றையுமே, இலக்கு ஆக - இலட்சியமாகக் கொண்டு, வலியொடு - பலத்தோடு, எய்தான் - பிரயோகித்தான்;(எ-று.) அருச்சுனன் எய்த ஒருகணையைச் சிவவேடன் தனதுகணையால் தடுத்துவிட்டு இரண்டு அம்புகளை அவ்வருச்சுனனது மார்பையும் தோளையும் துளைக்குமாறு ஏவிவிட, அதனால் துளைக்கப்பட்ட அவ்வருச்சுனன் எதிரியின் சிரசு மார்பு தோள் என்பவற்றை இலக்காகக் குறித்து மூன்று கணைகள் விட்டன னென்பதாம். ஆல் - அசை.(100) 101. | எய்தகணைதிருமேனியெய்துமுன்ன ரிறகுதுணிந்தொன்றி ரண்டாயிலக்குறாமல், வெய்தின்வலியுடனெய்தான் மூன்றுவாளிவிண்ணவர் கோன் மகன்மேலும் வேறொன்றெய்தா, னைதினிவன்வினோதமுறத்தொடுத்தானென்ப தறியாமலெயினன் முடியணிந்த பீலி, கொய்துநதியறல்சிதறப்பிறையுமானுங் குலையவொரு கணைகுரக்குக்கொடியோனெய்தான். |
(இ-ள்.)எய்த கணை - (அருச்சுனன்)எய்த அம்புகள், திருமேனி எய்தும் முன்னர் - (தனது)அழகிய உடம்பிற் படுதற்கு முன்னமே, இறகு துணிந்து - இறகுகள் அறுபட்டு, ஒன்று இரண்டு ஆய் - ஒவ்வொன்றும் இரண்டு துண்டாய்ப் பிளந்து, இலக்கு உறாமல் - (அவன்குறித்த) லட்சியத்தைப் பொருந்தாதனவாம்படி, வெய்தின் வலியுடன்-உக்கிரமான பலத்துடனே, மூன்று வாளி-மூன்று அம்புகளை எய்தான்-(சிவவேடன்) தொடுத்தான்: (அன்றியும்),விண்ணவர் கோன் மகன்மேல்உம்- விண்ணுலகத்துள்ள தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது குமாரனான அருச்சுனன் மேலும், வேறு ஒன்று-வேறொரு அம்பை, எய்தான்-;இவன்- இச்சிவபிரான், ஐதின்-எளிதாகவும், வினோதம்உற-விளையாட்டாகவும், தொடுத்தான் என்பது - அம்புதொடுத்தானென்பதை, அறியாமல் - தெரிந்துகொள்ளாமல், குரங்கு கொடியோன்-குரங்கினுருவத்தை எழுதியகொடியையுடைய அருச்சுனன், எயினன் முடி அணிந்த பீலி கொய்து- சிவவேடன் சிரசில் தரித்த மயிலிறகுமாலை அறுபட்டு, நதி அறல் சிதற-(அம்முடியிலுள்ள) |