பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்81

எய்த வில் போர் கண்டனம்-நீ இப்பொழுது அம்பெய்த வில்லின் போரைப்
பார்த்தோம்;அடடா-!வில் பிடிக்கும் விரகு அறியோம்-(உனக்குமுன்னே)
வில்லைப் பிடிக்கின்ற தந்திரத்தையும் (யாம்)அறியோம்;உன்னிடத்துஏ
வேதம் வில் போர் கற்போம் - வேதமந்திரங்களுடனே செய்கின்ற
வில்லின்போரை உன்பக்கலிலே (யாம்)கற்றுக்கொள்வோம்,'என்று-என்று
பரிகாசமாகச் சொல்லி, மற்று-பின்பு, ஒரு கணை-ஓரம்பை, அவன்மேல்-
அருச்சுனன்மேல், விட்டான்-தொடுத்தான்;(எ-று.)

     அருச்சுனன் சிவவேடன் முடிமீது அம்பெய்தது கண்ட பிரமத
கணங்களாகிய வேடர்யாவரும் அவ்வருச்சுனனோடும் பொருதற்கு எழ,
சிவவேடன் தன் கைச்சைகையால் அவர்களை அமர்த்தி அருச்சுனனை
ஏளனஞ்செய்து அவன்மீது ஓரம்பைத் தொடுத்துவிட்டனனென்பதாம்.
கிராதர்க்கு, அல்-கருநிறமும் அடர்ந்திருத்தலும் பற்றிய உவமை.
'நிற்போன்'என எதிர்காலத்தாற் கூறியது-இயல்பினால் வந்த
காலவழுவமைதி.  அடடா என்னும் முன்னிலையிடைச்சொல்லடுக்கு,
இகழ்ச்சிதோன்ற நின்றது.  கண்டனமேடா என்றும் பாடம்.       (102)

வேறு.

103.பீலிமுடி யோன்விடுபி றைக்கணையை வேறொருபி றைக்
                      கணையி னால்வி லகிவிற்,
கோலிவடி வாளிமழை சிந்தினன்ம ழைக் கரிய
                   கொண்டலென நின்ற குமரன்,
மூலிவடி வாமெயினன் மேல வைபடாமன்முனை
                     மண்மிசை குளிக்க முரணார்,
வேலியிடு மாறெனவி ழுந்தனவிழுந்ததனை விசயனனி
                               கண்டு வெகுளா.

இதுவும், மேற்கவியும் - ஒருதொடர்.

     (இ-ள்.) மழை கரிய கொண்டல் என நின்ற-மழைபெய்கின்ற கறுத்த
நீர்கொண்ட மேகம்போலக் (கருநிறமுடையவனாய்) நின்ற, குமரன் -
அருச்சுனன்,-பீலி முடியோன் விடு பிறை கணையை-மயிற்பீலிமாலையையணிந்த
திருமுடியையுடைய சிவபிரான் (தன்மேல்) விட்ட அர்த்தசந்திர பாணத்தை,
வேறு ஒரு பிறை கணையினால் விலகி-வேறோரு அர்த்தசந்திர பாணத்தால்
தடுத்து, வில் கோலி - வில்லை நன்றாகவளைத்து, வடி வாளி மழை
சிந்தினன் - கூர்மையான அம்புகளை (வேடன்மீது) மழைபோல மிகுதியாகச்
சொரிந்தான்; அவை - அவ்வம்புகளெல்லாம், மூலி வடிவு ஆம் எயினன்
மேல்-(எல்லாபொருள்களுக்குங்) காரணமாகவுள்ள சிவனது ரூபமான
வேடன்மேல், படாமல்-சென்றுதைக்காமல், முரண் ஆர் வேலி இடும் ஆறு
என-வலிமைபொருந்திய வேலி பொருந்தும் விதம்போல, முனை-நுனிகள்,
மண்மிசை குளிக்க-பூமி மேலே அழுந்தும்படி, விழுந்தன-(அவனைச்
சுற்றிலும்) விழுந்துவிட்டன; விழுந்ததனை-(அங்ஙனம்) விழுந்ததை, விசயன்-
அருச்சுனன், கண்டு-பார்த்து, நனி வெகுளா-மிகவுங் கோபித்து,-(எ-று.)-
'வெகுளா' என்பது, மேற்கவியில் 'விடுத்தனன்'
என்பதோடு முடியும்.