னும் - அமலன் - குற்றமில்லாதவனும் ஆகிய சிவபிரான், சமரம் வேடன் வடிவம் கொடு - போருக்கு உரிய வேடனது உருவத்தை அடைந்து, நரன் கை அடியுண்டபொழுது - அருச்சுனனது கையினால் அடிபட்டபொழுது,- வேதம்-வேதங்கள், அடியுண்டன-அடிபட்டன;விரிந்த பல ஆகமம் விதங்கள்-விரிவாயுள்ள அனேக ஆகமங்களின் வகைகள், அடியுண்டன-; ஒர் ஐம் பூதம்-ஒப்பற்ற பஞ்ச பூதங்கள், அடியுண்டன-; விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு - விநாழிகை முதலாகச் சொல்லப்படுகிற காலதத்துவமும், சலிப்பு இல் பொருளின் பேதம் - நிலைபெயர்தலில்லாத ஸ்தாவரப் பொருள்களின் வகைகளும், அடியுண்டன-;(எ-று.) விநாழிகை - நாழிகையின் அறுபதி லொருபங்கு. மகளார், ஆர் - சிறப்புணர்த்த வந்த பலர்பால்விகுதி. 'அமலன்'என்பது - தான் இயல்பாக ஆணவம் முதலிய மலங்களின் தொடர்ச்சியில்லாதவன் என்னும் பொருளை மாத்திரமேயன்றி, தனக்குச் சரீரமாகவுள்ள சராசரங்களின் மலசம்பந்தமுமில்லாதவ னென்னுங் கருத்தையும் உடையது. பின் இரண்டடி - இறைவனது பெருஞ்சிறப்புக்களுடனே, அடியவர்க்கு எளியவனாயிருக்குந் தன்மையையும் வெளியிட்டது. (113) 109.-இதுமுதல் நான்குகவிகள் - அருச்சுனனோடு சிவவேடன் மற்போர்புரிதலைக்கூறும். என்பொடுகொழுந்தசை நிணங்குருதியென்னுமவையீ ரிரண்டானும் வயிரா, வன்பொடுவளர்ந்தமிரு காதிபதிகாரியெனும் வடிவழகுபெற் றமறவோன், அன்பினொடுபேரறம் வளர்த்தருளெயிற்றிமிக வஞ்சவ பிராமவெயினன், பொன்புரையுமேனியிலடித்தமைபொறாது மற்போர் புரியுமாறுகருதா. |
இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.)என்பொடு - எலும்பும், கொழு தசை - கொழுமையான தசையும், நிணம் - கொழுப்பும், குருதி-இரத்தமும், என்னும் அவை ஈர் இரண்டான்உம் - என்று சொல்லப்படுகிற அந்த நான்கு பொருள்களாலும், வயிரா-வயிரங்கொண்டு [உறுதியாய்என்றபடி],வன்பொடு-வலிமையோடு, வளர்ந்த-,மிருக அதிபதி-மிருகங்களுக்குத் தலைமையான சிங்கமொன்று, காரி-கரு நிறமுடையது, எனும்-என்று சொல்லப்படுகிற, வடிவு அழகு - உடம்பின் தன்மையை, பெற்ற-உடைய, மறவோன் - பராக்கிரமமுடையனாகிய அருச்சுனன், அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச -அன்புடனே பெரிய தருமங்களையெல்லாம் வளர்த்தருளுகின்ற வேடச்சி வடிவமான உமாதேவி மிகவும் அஞ்சும்படி, அபிராமன் எயினன் - அழகிய வேட வடிவமான சிவபிரானது, பொன் புரையும் மேனியில்-பொன்னை யொத்து அருமையான திருமேனியிலே, அடித்தமை-அடித்ததனை, பொறாது-பொறுக்காமல், (அவ்வேடன்),மல் போர் புரியும் ஆறு - மல்லயுத்தஞ் செய்யும்படி, கருதா - எண்ணி,-(எ-று.)-'கருதா'என்பது - மேற்கவியில் 'தொடங்கியுற' என்பதனோடு முடியும். |