பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்87

     எழுவகைத் தாதுக்களில் என்புமுதலிய நான்கும் வலிமைக்குச்
சிறத்தலால், அவற்றை எடுத்துக்கூறினார்.  வயிரா என்னும் இறந்தகால
வினையெச்சத்தில், வயிர மென்பதன் விகாரமாகிய வயிர் - பகுதி.  காரி,
கருமையென்பதன் திரிபாகிய கார்-பகுதி;இ - விகுதி.  காரி-வயிரவனென்று
பொருள்கூறி, மிருகாதிபதியும் காரியும் எனினுமாம்.  வயிரவமூர்த்தி
பிக்ஷாடனஞ் செய்தபோது வெகு அழகிய வடிவோடு சென்றா னென்று
கூர்மபுராணங் கூறுவதுங் காண்க.  மிருகாதிபதி - யானைக்குத்
தலைவனாகிய, காரி - இந்திரன் என்றாருமுளர்.  உமாதேவி எண்ணான்கறம்
வளர்த்த வரலாறு, காஞ்சிப்புராணத்திற் காணப்படும்.              (109)

110.உள்ளடிவிரற்றலைகள் புறவடிபரட்டினுட னுயர்கணைக்
                             கான்முழந்தாள்,
தள்ளரியவூருவுயர்தாழ்வரைகளொத்தகடி தடமு
                         தரமார்புதிணிதோள்,
துள்ளிவருசெங்கையொடுமுன்கைபிடர்நெற்றியொடுசூடமென
                           வெண்ணுபடையால்,
வள்ளலெனையாளுடையமாதவனுமாதவனுமல்லமர்
                             தொடங்கியுறவே.

     (இ-ள்.)உள் அடி - உள்ளங்கால்களும், விரல் தலைகள் -
விரல்களின் நுனிகளும், புறம் அடி-புறங்கால்களும், பரட்டினுடன்-
காற்பரடுகளும், உயர் கணைக்கால் - (வலிமையிற்)சிறந்த கணுக்கால்களும்,
முழந்தாள்-முழங்கால்களும், தள் அரிய ஊரு-(வலிமைமிகுதியால்)
நீக்குதற்கு அருமையான தொடைகளும், உயர் தாழ் வரைகள் ஒத்த -
உயர்ந்து தோன்றுகின்ற மலைத்தாழ்வரைகளை ஒத்திருக்கின்ற, கடி தடம் -
அரையும், உதரம்-வயிறும், மார்பு-மார்பும், திணிதோள் - வலியதோள்களும்,
துள்ளி வரு செம் கையொடு - துள்ளிக்கொண்டு (முன்னே விரைந்து)
வருகிற சிவந்தகைகளும் முன் கை முன்னங்கைகளும், பிடர்-பின்கழுத்தும்,
நெற்றியொடு - நெற்றியும், சூடம் - உச்சியும், என - என்று, எண்ணு -
எண்ணிச் சொல்லப்படுகிற, படையால்-ஆயுதங்களினால் [வேறே
ஆயுதமெடாமல் இவ்வுறுப்புகளையே போர்க்கருவியாகக் கொண்டு
என்றவாறு],வள்ளல்-வரையாதுகொடுக்குந் தன்மையையுடையவரும், எனை
ஆள் உடைய மாது அவன்உம் - என்னை ஆளுதலுடைய உமாதேவியை
ஒருபாகத்திற் கொண்டவருமாகிய சிவபிரானும், மா தவன்உம்-மிகுந்த
தவத்தையுடைய அருச்சுனனும், மல் அமர் - மற்போரை, தொடங்கியுற -
தொடங்க,-(எ-று.)-'வீசினன்'என அடுத்த கவியோடு முடியும்.

     உள் அடி - காலின் உள்ளிடமென்றும், புறவடி - காலின் மேலிட
மென்றும் பொருள் படுதலால், முன்பின்னாகத் தொக்கு வந்த
ஆறாம்வேற்றுமைத்தொகை;இலக்கணப்போலி.  "மெய்சென்று தாக்கும்
வியன்கோலடிதன்மேற், கைசென்று தாங்குங் கடிது"ஆதலால், 'துள்ளிவரு
செங்கை'எனப்பட்டது.  ஈற்றடியில், மாதவன் உமாதவன் எனப்பிரித்து -
என்னை அடிமையாகவுடைய வள்ளலாகிய பெருந்தவமுடைய
அருச்சுனனும், உமா தேவியினுடைய கணவனான உருத்திரனும் என்றும்
பொரு