ளுரைப்பாருமுளர். 'எனையாளுடையுமாதவனு மாதவனும்'எனப் பாடமுமாம். (110) 111. | மல்லமர்தொடங்கியிவரிருவரும்வெகுண்டுபொரமாதிரமு மாநிலமுமேல், எல்லையுமதிர்ந்துசுழல்கின்றபொழுதத்திமயவின்ப மயில்கேள்வன்வெகுளா, நல்லிசைபுனைந்தமணிநூபுரவிசாலவொளி நண்ணுபதநாண்மலரினால், வில்லியரிலெண்ணுதிறல்வில்லுடைய காளைதனை விண்ணுலகில்வீசினனரோ. |
(இ-ள்.)இவர் இருவர்உம்-(சிவனும்அருச்சுனனும் ஆகிய)இந்த இரண்டுபேரும், மல் அமர் தொடங்கி-மற்போரை ஆரம்பித்து, வெகுண்டு- கோபித்து, பொர-போர்செய்ய, (அதனால்),மாதிரம்உம் - திக்குக்களும், மாநிலம்உம்-பெரிய பூமியும், மேல் எல்லைஉம்-மேலுலகமும்,அதிர்ந்து- நடுங்கி, சுழல்கின்ற பொழுதத்து-சுழற்சியடைகிற காலத்தில், இமயம் இன்பம் மயில் கேள்வன்-இமயமலையிற்பிறந்தஇன்பத்தைத்தருகின்ற மயில்போலுஞ் சாயலையுடையஅம்பிகையின் கணவனானசிவவேடன், வெகுளா-கோபித்து, நல் இசை புனைந்த-நல்லகீர்த்தியைக் கொண்ட, மணி நூபுரம் விசாலம் ஒளி நண்ணு-இரத்தினச்சிலம்பினது விரிவான பிரகாசம் பொருந்திய, பதம் நாள் மலரினால்-அன்றுமலர்ந்ததாமரைப்பூப்போல் மெல்லிய (தனது) திருவடியினால்,வில்லியரில் எண்ணு திறல் வில் உடைய காளைதனை- விற்போர்வல்லவர்களிற் சிறந்தவனாகநன்குமதிக்கப்படுகிற வலிமையையுடைய காண்டீவ வில்லையுடையஇளவீரனானஅருச்சுனனை, விண் உலகில்-ஆகாயமார்க்கத்தில், வீசினன்-தூக்கியெறிந்தான்; (எ-று.) சிவ வேடனும்அருச்சுனனும் மற்போர் புரிந்தபோது உண்டான அதிர்ச்சியால் திக்குக்கள் முதலியன நிலைகுலைந்துசுழன்றனவாக, அப்போது சிவவேடன் வெகுண்டு அருச்சுனனைப்பிடித்துவானத்தில் தூக்கியெறிந்தன னென்பதாம். மயில் - உவமையாகுபெயர். நல்லிசை புனைந்தபதம், நூபுர விசாலவொளிநண்ணுபதம் என இயையும், வில்லுடைய - ஒளியுடைய என்றுமாம். விண்ணினுற வீசினனரோ என்றும் பாடம். (111) 112. | விண்ணவர்தமூர்புகுதவிண்ணவர்பிரான்மதலைவிசை யுடனெழுந்து முகில்போல், மண்ணினிடைவீழ்தருமுன்மார்பகலமல்லதைவயங்கு புறமென்று தெரியான், எண்ணரியஞானவொளியாகிவெளியாகிவரு மெயினர்பதியானகருணைப், புண்ணியன்மகிழ்ந்துருகநின்றொலியுடன்பழைய பூசல்பொரவெண்ணியெதிர்வான். |
(இ-ள்.)விண்ணவர் பிரான் மதலை- தேவராசனானஇந்திரனது புத்திரனாகியஅருச்சுனன்,-விண்ணவர்தம்ஊர் புகுத-தேவலோகத்தைச் சமீபிக்கும்படி, விசையுடன்-வேகத்தோடு, முகில் போல் - மேகம்போல, எழுந்து - (ஆகாயத்தில்)எழும்பி, மண்ணினிடை - பூமியிலே, வீழ்தரும்முன் - விழுவதற்கு முன்னே [மிகவிரைவிலென்றபடி],அகலம் மார்பு அல்லதை வயங்கு புறம் |