என்று தெரியான்-(தனது)பரந்த மார்பையே யன்றி விளங்குகின்ற முதுகைக் காட்டாதவனாகி,-எண்அரிய ஞானம் ஒளி ஆகி-(யாவராலும்) எண்ணுவதற்கும் அருமையான ஞானமயமான தேஜோரூபியாய், வெளி ஆகி வரும் கருணைபுண்ணியன் ஆன - வெளியிற் காணப்பட்டுவருகிற திருவருளையுடையபரிசுத்த மூர்த்தியான, எயினர்பதி-(சிவபிரானது உருவமாகிய)வேடர் தலைவன்,மகிழ்ந்து உருக-(தன்னைக்கண்டு)களித்து மனம் உருகும்படி, நின்று-முன்னே நின்று, ஒலியுடன் - ஆரவாரத்துடனே, பழைய பூசல் பொர எண்ணி-முன்செய்த மற்போரை (மீண்டுஞ்) செய்ய நினைத்து,எதிர்வான்-எதிர்ப்பவனானான்;(எ-று.) சிவவேடன் தன்னைத்தூக்கி வானத்தி லெறியவும், அப்போதும் அருச்சுனன் சிறிதும் பின்வாங்காது மீண்டும் முன்போலப் போர் செய்ய எண்ணி ஆரவாரித்து எதிர்ப்பவனாயினனென்க. வெளியாகி-ஆகாச ரூபமாய்; அருவமாகி என்றுமாம். மார்பமுகமல்லதை என்றும் பாடம், (112) 113.-சிவபிரான்அருச்சுனனுக்குப் பிரதியக்ஷமாதல். வெய்யகணநாதர்கணதேவர் விபுதாதியர் விரிஞ்சிசிவயோ கியரருஞ், செய்யசுடரோனளகையாதிபதிகின்னரர்கள்சித்தர்பலசாரணர் மணிப், பையரவினாடிபுருகூதனிவர்சூழ்தரவொர்பச்சைமயில் பாதியு டனே, துய்யவிடைமீதொருசெழுஞ்சுடரெழுந்தது தொழுந்தகைய தாகுமளவோ. |
(இ-ள்.) (அந்தச் சமயத்தில்), வெய்ய கண நாதர் - (பகைவர்களுக்குப்) பயங்கரமான பிரம தகணங்களுக்குத் தலைவர்களும், கணதேவர்-பிரம தகணங்களாகிய, தேவர்களும், விபுதஆதியர் - மற்றைத் தேவர் முதலியோரும், விரிஞ்சி - பிரமனும், சிவயோகியர் - சிவவிஷயமான யோகாப்பியாசத்தையுடைய முனிவர்களும், அரு செய்ய சுடரோன் - (காணுதற்கு) அருமையான சிவந்த கிரணங்களுடைய சூரியனும், அளகை ஆதிபதி - அளகாபுரிக்கு அரசனான குபேரனும், கின்னரர்கள் - கின்னரர்களும், சித்தர்-சித்தர்களும், பல சாரணர் - அநேகசாரணர்களும், மணி பை அரவின் ஆடி - மாணிக்கத்தையுடைய படத்தையுடைய பாம்பின்மீது ஆடின திருமாலும், புருகூதன் - இந்திரனும், இவர் - என்கிற இவர்கள், சூழ்தர - (தன்னைச்சுற்றிலும்) நிற்கும்படி, துய்ய விடை மீது- பரிசுத்தமாகிய ரிஷபத்தின்மேல், ஒரு செழு சுடர்-(எல்லாஒளிகளினும்) மேம்பட்டதொரு ஒளியுருவம், ஒர் பச்சை மயில் பாதியுடனே-பசுநிறமுள்ள மயில்போலுஞ் சாயலையுடைய உமாதேவியின் உருவமான இடப்பக்கத்துடனே, எழுந்தது - தோன்றிற்று; தொழும் தகையது ஆகும் அளவுஓ-(அது) வணங்கத்தக்க தன்மையுடையதோ? [வணங்குதற்கு அரியதென்றபடி]; (எ-று.) பின்னும் அருச்சுனன் மற்போரில் எதிர்க்க வர, அப்போது பிரமதகணங்களும் தேவகணங்களும் முனிகணங்களும் சூழ்ந் |