பக்கம் எண் :

90பாரதம்ஆரணிய பருவம்

திருக்கவிருஷபவாகனத்தின்மேல் பார்வதியோடும் பரமசிவன்
பிரதியட்சமாய்த் தோன்றின னென்க.  அங்குத்தோன்றிய பரஞ்சோதியின்
வடிவத்தின் தன்மையை அளவிட்டு எவராலும் வணங்குவதற்கு அரிதென
அச்சோதியின் சிறந்த தன்மையை, 'தொழுந்தகையதாகுமளவோ'
என்றதனாற்கவி வெளியிட்டனர்.

     'மணிப்பையரவினாடி' என்றது-விஷ்ணுவினது அவதாரமாகிய
கிருஷ்ணபகவான்.  யமுனாநதியில் ஓர்மடுவிலிருந்துகொண்டு
அந்நதிமுழுவதையுந் தன்விஷாக்கினியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப்
பானயோக்கியமாகாதபடி செய்துவந்த காளியனென்னுந் துஷ்டநாகத்தை ஸ்ரீ
கிருஷ்ணன் தண்டிக்கவேண்டுமென்று கருதி அம்மடுவிற்குச்
சமீபத்திலுள்ளதொரு கடம்ப மரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து,
கொடிய அந்நாகத்தின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ்செய்து
நசுக்கி வலியடக்கி, 'மங்கலியபிட்சையிடவேண்டும்' என்று தன்னை
வணங்கிப் பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி உயிரோடு
கடலிற்சென்றுவாழும்படி அந்தக் காளியனை விட்டருளினாரென்னும்
வரலாற்றை உட்கொண்டு; இனி, இத்தொடர்க்கு- ஆதிசேஷனிடத்துப்
பொருந்திய திருமாலென்றுமாம். நாடி எனப்பிரித்து -
திருவனந்தாழ்வானிடத்து விருப்பமுடையானென்றலும் அமையும்.  ஆதிபதி-
நீட்டல்.  விரிஞ்சி-(அன்னப்) பறவையால் தாங்கப்படுபவனென்று
காரணம்பற்றிய பெயர்.  அளகை - குபேரனது வாழிடமான பட்டணம்.
செழுஞ்சுடர் என்றது-பரஞ்சோதி சுவரூபமான சிவத்தை.            (113)

114.-இனிமூன்றுகவிகள் - ஒருதொடர்;அருச்சுனன்
சிவபிரானைத்தரிசித்து வணங்கிப் பரமானந்தம்
அடைந்ததைத்தெரிவிக்கும்.

கைவிலுடனேயெயினர்கோடிபலர்சூழவரக் கன்னிமயில்
                                பின்னர்வரவே,
தெய்வமுறைஞாளிகடொடர்ந்துவரவந்துபொருசெய்ய
                          சிவவேடன்முடிமேல்,
சைவமுறையேயிறைவர்தண்மலரினோடறுகு
                 சாத்தியொளிர்நாண்மலரெலாம்,
மெய்வடிவுகொண்டனையகரியதவவேடனிணை
                          விழிமலர்பரப்பிமகிழா.

     (இ-ள்.) எயினர் கோடி பலர் - அநேககோடிவேடர்கள், கைவிலுடனே -
(தந்தமது) கையிற்பிடித்த வில்லோடும், சூழவர - (தம்மைச்) சுற்றிலும் வரவும்,
கன்னி மயில்-இளைய மயில்போலுஞ் சாயலுடைய உமாதேவி, பின்னர்
வர-(தமக்குப்) பின்னே வரவும், தெய்வம் மறை ஞாளிகள் -
தெய்வத்தன்மையுடைய வேதங்களின் வடிவமான நாய்கள், தொடர்ந்து வர -
(தம்மைப்) பின்தொடர்ந்து வரவும், வந்து பொரு-எதிர்வந்து போர் செய்த,
செய்ய - அழகுடைய, சிவவேடன்-வேட வடிவமாகிய சிவபிரானது,
முடிமேல்-திருமுடியின்மீது, சைவமுறையே இறைவர் தண் மலரினோடு அறுகு
சாத்தி ஒளிர் நாள் மலர் எலாம்-சைவசமய நூலின்விதிப்படியே சிறந்த
தேவர்களும் முனிவர்களும் குளிர்ந்த பூக்களையும்