பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்91

அறுகம் புல்லையும் சமர்ப்பிக்க (அதனால் அத்திருமுடியில்) விளங்குகிற
புதிய பூக்களையெல்லாம், மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவம்
வேடன்-சத்தியமானது ஓருருவத்தையெடுத்தாற்போன்ற கருநிறமுடைய
தவத்திற்குரிய கோலத்தையுடைய அருச்சுனன், இணை விழி மலர் பரப்பி-
(தனது) தாமரைமலர்போன்ற இரண்டு கண்களையும் நன்றாகவிழித்துப்பார்த்து,
மகிழா - களித்து, - (எ-று.)- 'தொழா' என மேலிற்கவியில் தொடரும்.

     'தன்னோடுபோர்புரியவந்த வேடுவன் சிவபிரான்'என்பதை
முடியிற்சாத்தப்பட்டுள்ள கொன்றைமலர் அறுகம்புல் முதலியவற்றால்
நிச்சயமாயறிந்து அருச்சுனன் பெருமகிழ்ச்சியடைந்தன னென்க.
கந்யாஎன்னும் வடமொழித் திரிபாகிய கன்னியென்னும் பெயர்ச்சொல் -
இங்கே இளமையென்ற பொருளைத்தந்தது.  சைவம்-சிவனைத்
தெய்வமாகக்கொள்ளும் மதம்;தத்திதாந்த வடமொழி.  சைவமுறை-
சிவாகமம்: முறை-நூல்.  வேடன் என்ற சொல்-தமிழ்மொழியாய்
வேட்டுவன் என்ற பொருளிலும், வடமொழியாய் வேஷத்தையுடையவன்
என்ற பொருளிலும் வந்துள்ள நயம் பாராட்டற்பாலது.  சாத்தி-சாத்த.   (114)

115.-தும்பைவகைமாலைசெறிவில்லமொடுகொன்றைமலர்சூத
                            மறுகேகமழ்தருஞ்,
செம்பவளவேணிமிசைதிங்கணதி சூடியருள்செம்
                     பொன்வடமேருவனையான்,
உம்பர்மணியாழினொடு தும்புருவுநாரதனு     
                      முருகியிசைபாடவருள்கூர்,
அம்பையுடனேவிடையின்மீதொளிரநின்றதனையஞ்சலி
                         செய்தன்பொடுதொழா.

     (இ-ள்.)தும்பை - தும்பைப்பூவினாலாகிய,வகை-பலவகைப்பட்ட,
மாலை- மாலைகளும்,செறி வில்லமொடு - நெருங்கிய பில்வபத்திரங்களும்,
கொன்றைமலர் - கொன்றைப்பூக்களும், சூதம் - மாந்தளிர்களும், அறுகு -
அறுகம் புற்களும், கமழ் தரும்-வாசனைவீசப்பெற்ற, செம் பவளம்
வேணிமிசை-பவழம்போலச் சிவந்த சடையின்மேல், திங்கள் நதி சூடியருள்
- சந்திரனையும்கங்காநதியையும் தரித்தருளிய, செம் பொன் வட மேரு
அனையான்-சிவந்தபொன்மயமான வடக்கிலுள்ள மகாமேருமலையை
ஒத்தவனாகியபரமசிவன், உம்பர் - தேவர்கள்கேட்பதற்குரிய, மணி
யாழினொடு-அழகியவீணையின்இசையுடனே, தும்புருவும்-,நாரதனும்-,
உருகி - மனமுருகி, இசைபாட - கீதத்தைப்பாடாநிற்க, அருள் கூர்
அம்பையுடனே - கருணைமிகுந்தஉமாதேவியுடனே, விடையின் மீது -
விருஷபத்தின்மேல், ஒளிர நின்றதனை- விளக்கமாக எழுந்தருளித் தரிசனந்
தந்துநின்ற  திருக்கோலத்தை, அஞ்சலிசெய்து - கைகூப்பிவணங்கி,
அன்பொடு - பக்தியுடனே, தொழா - நமஸ்கரித்து,-(எ-று.)-'ஆடினன்'
என மேற்கவியோடு தொடரும்.

     தனக்குச்சிவபிரான் உமாதேவியோடு விருஷபவாகனத்திற்
பிரதியட்சமானது கண்டு பெருமகிழ்ச்சி யடைந்த அருச்சுனன் கைகூப்பி
வணங்கிப் பேரன்போடு நமஸ்கரித்தன னென்பதாம்;தும்பைமாலை
முதலியவற்றைச் சிவபிரான் முடியிலணிந்துள்ளன