கிளத்தல்"என்னுந் தொல்காப்பியவிதிக்கு ஏற்ப, 'தருமனுக்கநுசனாயினேன் பரம்பொருளுக்கு நண்புமாயினேன்'என உம்மையில்லாத சொல் முன் சொல்லப்பட்டது. (121) 122.-இவ்வாறுசொன்னஅருச்சுனனைச்சிவபிரான் தழுவுதல். என்றுகொண்டிம்முறை யிவனியம்பவே மன்றலங்கொன்றையம் மாலைமௌலியான் ஒன்றியதவம்புரி யும்பர்தம்பிரான் தன்றிருமதலையைத்தழுவினானரோ. |
(இ - ள்.)என்று-, இ முறை - இவ்விதமாக, இவன்-அருச்சுனன், இயம்ப - சொல்ல, -மன்றல் - வாசனையையுடைய,அம் - அழகிய, கொன்றைமாலை-கொன்றைப்பூமாலையைச்சூடிய,மௌலியான் - திருமுடியையுடைய சிவபெருமான், ஒன்றிய தவம் புரி உம்பர் தம் பிரான் தன் திருமதலையை- பொருந்திய தவத்தைச் செய்த தேவராஜகுமாரனான அருச்சுனனை,தழுவினான்- கட்டிக் கொண்டான்;(எ - று.) இயம்பத்தழுவினானென்க,கொண்டு-அசை. அம்-சாரியையுமாம். 123.-சிலமொழிந்துசிவபிரான் அருச்சுனனைத் தேற்றுதலுறுதல். தழுவினன்பெருந்துய ரகற்றித்தண்ணளி பொழிதருகண்ணினன் புரக்குஞ்சிந்தையன் அழிவறவொழிவற வமர்ந்தசோதியன் பழுதறுமொழிசில பகர்ந்துதேற்றினான். |
(இ - ள்.)அழிவு அற - (எப்பொழுதும்) அழிதலில்லாமலும், ஒழிவு அற-நீங்குதலில்லாமலும், அமர்ந்த-(இயற்கையாகப்) பொருந்திய, சோதியன் - ஒளியையுடைய சிவபெருமான்,-தண் அளி பொழி தரு கண்ணினன் - குளிர்ந்த கருணையைச்சொரிகின்ற திருக் கண்களையுடையவனும்,புரக்கும் சிந்தையன் - (அருச்சுனனைக்)காத்தருளவேண்டுமென்கிற திருவுள்ளத்தை யுடையவனுமாய், தழுவினன்- (அவனை)அணைத்துக்கொண்டு,பெரு துயர் அகற்றி - (அதனால்அவனது) மிகுந்த துன்பங்களைப்போக்கி, பழுது அறு சில மொழி பகர்ந்து - குற்றமில்லாத சில வார்த்தைகளைச்சொல்லி, தேற்றினான்-(அவனைச்)சமாதானப் படுத்துபவரானார்;(எ - று.)- அதனை மேல் நான்குகவிகளிற் காண்க. பெருந்துயர்என்றது-தவஞ்செய்ததனாலும்போர் செய்ததனாலும் உண்டான இளைப்பை. தேற்றினான்என்றது - துரியோதனாதியராலுண்டானதுன்பத்தினின்றும், பரமசிவனைத்தான் அடித்ததனாலானஅச்சத்தினின்றுந் தேறப் பண்ணுதல். (123) |