முதலிரண்டடிகளிலுள்ள 'என்று' என்னுஞ் சொல்லெல்லாம் - எண்ணிடைச்சொல். பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமிதேவியுடுக்கும் ஆடையென்றல், கவிசமயம். நான்காம்அடியில், என்று-சூரியன்: (இயற்கையிலேயே) ஒளியையுடையது என்று காரணப்பொருள்படும். நதீ, அவநி-வடசொற்கள். அவநி-பாதுகாக்கப்படுவதென்க. (163) 5.-பாண்டவர்வசிக்கிற நாடுஇவ்விதமாயிருக்குமென்று வீடுமன் கூறல். முன்னொற்றையிருசங்கமுடனூதவெதிர்சென்றுமுனைவெல்லுமா மன்னொற்றரிதுகூறமந்தாகினீமைந்தன்மகன்மைந்தனுக்கு உன்னொற்றருணர்தற்குவருமோவறன்காளையுறைநாடுகார் மின்னொற்றுமழையுண்டுவிளைவுண்டெனத்தேடும்விரகோதினான். |
(இ -ள்.) முன்-முன்னே, ஒற்றை-ஊதுகொம்புகளும், இரு சங்கம்- (வலம்புரி இடம்புரி என்னும்) இருவகைச் சங்குகளும், உடன்ஊத-ஒருசேர ஊதாநிற்க, எதிர் சென்று-(பகைவர்களை) எதிர்த்துப்போய், முனை வெல்லும்- போரிற் சயிக்கின்ற, மா மன் - பெரிய அரசனான துரியோதனனது, ஒற்றர் - வேவுகாரர்கள், இது கூற - இவ்வார்த்தையைச்சொல்ல,-மந்தாகினீ மைந்தன் - கங்கையினது புத்திரரராகிய பீஷ்மர்,-மகன் மைந்தனுக்கு - (தமது) பௌத்திரனாகிய துரியோதனனுக்கு,-'அறன் காளை உறை நாடு - தருமபுத்திரன் (மறைந்து) வசிக்கின்ற தேசம், உன் ஒற்றர் உணர்தற்கு வரும்ஓ - உனது ஒற்றர்கள் அறியக்கூடுமோ? (அது) மின் ஒற்றும் கார் மழை உண்டு - மின்னல்கள் பொருந்திய மேகங்கள் பெய்கின்ற (மிக்க) மழையுள்ளதாகும்; விளைவு உண்டு - (நல்ல) விளைவுள்ளதாகும்,' என - என்று, தேடும் விரகு- (பாண்டவர்களிருக்கின்ற இடத்தைத்) தேடிக் கண்டறியத்தக்க உபாயத்தை, ஓதினான்-சொன்னார்; (எ - று.) பிரமனது சாபத்தால் வருணன் குருகுலத்திலே சந்தனுமகாராஜனாய்ப் பிறந்தான். அவனுக்கு முதல்மனைவியான கங்கையினிடத்து வசிஷ்டமுனிவர்சாபத்தால் (அஷ்டவசுக்களுட்) பிரபாஸனென்னும்வஸு பீஷ்மனாகத்தோன்றியதனால், 'மந்தாகினீ மைந்தன்' எனப்பட்டான். அதன் விவரம்:-முன்ஒருகால்தேவர்கள்யாவரும் கூடிய பிரமதேவனது சபையிற் சென்று கங்காநதியின் பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும் அவன்மீது காதல்கொண்டு எதிர்நோக்கினாள்; அதனையறிந்த நான்முகக்கடவுள், வருணனைப் பூமியில் மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய் அவனைச் சிலநாள் மணந்திருக்கவும் சபித்திட்டான்; அங்ஙனமே வருணன் குருகுலத்திற் சந்தனுவாய்ப் பிறந்தான்: கங்கையும் ஒரு மானிட மகளாகி 'யான் எந்தெந்தத் தீச்செயல்செய்யினும் மறுக்கலாகாது' என்னும் நிபந்தனையோடு அவனை மணஞ்செய்து கொண்டாள். இது நிற்க; பிரபாசனென்னும்வசு, தன் மனைவியின் சொல்லைக்கேட்டு, வசிட்டமுனிவனிடமுள்ள காமதேனுவைக் |