13.-மன்னவன் மனமுவந்து அந்தமுனிவனை வரவேற்றல். மன்முனிமொழிந்தவாய்மைகேட்டந்தமனுகுலமன்னனுமகிழ்ந்து தன்மனநெகிழ்ந்தநெகிழ்ச்சியுமுணர்வுந்தகைமையுமுவகையிற்றோன்ற என்மனைவயினின்றெய்தியபயன்யானேழெழுபிறப்பினும்புரிந்த நன்மையின்விளைவேவேண்டுநாளீண்டுநண்ணுதிரெனநனிநவின்றான். |
(இ-ள்.) மன் முனி - அரசனாய்ப்பிறந்து துறவிவேடத்தைக் கொண்டுள்ள யுதிஷ்டிரன், மொழிந்த-சொன்ன, வாய்மை-உண்மையான சொல்லை, கேட்டு-, அந்த மனுகுலம் மன்னன்உம்-மனுகுலத்துத் தோன்றிய அரசனாகிய அந்த விராடமன்னவனும்,-மகிழ்ந்து-, தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சிஉம்-(அந்த முனிக்கோலத்தையுடைய தருமபுத்திரன் விஷயத்தில்) தன்மனம் இளகியிருக்கும் நிலைமையும், உணர்வுஉம்-(அவனைப் பற்றிய) நல்லுணர்ச்சியும், தகைமைஉம் - பாராட்டும், உவகையில் - (அந்த விராடராசன் வெளிக்காட்டிய) மகிழ்ச்சியில்தானே, தோன்ற - வெளிக்குத் தெரியாநிற்க:- 'இன்று- இன்றைத்தினம், என் மனைவயின் - என் வீட்டிலே, எய்திய - (நீர்) வந்து சேரப்பெற்றதனாலான, பயன்-நல்விளைவு,-யான்-,ஏழ் எழுபிறப்பின்உம் - எழுவகைப்பட்ட எழுபிறப்பிலும், புரிந்த - செய்துள்ள, நன்மையின்- நல்வினையின், விளைவுஏ-பயனேயாம்: வேண்டும் நாள் - (நீர் இங்கே) வசிக்கவேண்டும் என்று நினைக்கிற நாள், ஈண்டு நண்ணுதிர்-இங்குத்தானே வாசஞ்செய்மின்,' என-என்று, நனி நவின்றான்-இனிதாகக் கூறினான்; (எ - று.) விராடராசனதுமுகத்தில்தோன்றிய குறிப்பு, அந்தமன்னவனுடைய மனமகிழ்ச்சி முதலியவற்றை வெளித்தோற்றுவித்ததென்க; "அகத்தினழகு முகத்தில் தெரியும்" என்ற பழமொழி இங்குக் கருதத்தக்கது. ஏழெழு பிறப்பு - விலங்கு புள் தெய்வம் மானுடம் ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்னும் ஏழுபிரிவினையுடையனவும், ஒருபிராணி செய்த புண்ணியபாவங்கள் தொடர்தற்கு உரியனவுமான ஏழுபிறப்புக்கள். (13) 14.-வீமன், சமையற்காரனென்றுசொல்லிக்கொண்டு விராடனவையைச் சேர்தல். தண்டினுக்கொருவன்புயவலிக்கொருவன்றனுவினுக்கொருவனென் றுரைக்குந், திண்டிறற்பவனகுமரனுஞ் சின்னாள்சென்றபின்றெள்ளமு தனைய, உண்டியைக்குறித்துக்கற்றதன்கல்வியுரிமையைக்குறித்தடு தொழிற்கு, மண்டலத்தரசேயொருவன்யான் வீமன் மடையனென்ற ரசவைவந்தான். |
(இ -ள்.) 'தண்டினுக்கு ஒருவன் - தண்டாயுதத்தையேந்திப் பொருவதில் ஒப்பற்றவன்; புயம் வலிக்கு ஒருவன் - தோள்வலியில் ஒப்பற்றவன்: தனுவினுக்கு ஒருவன்-தநுர்வித்தையிலும் ஒப்பற்றவன்,' என்று -, உரைக்கும் - (உலகத்தாராற்) சொல்லப்படுகின்ற, திண் திறல் - மிக்கவலிமையையுடைய, பவனகுமரன்உம் - வாயு |