பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 111

(பெரிய)மலைகளால், உயர் நகங்களை - உயர்ந்த மலைகளை, நறுக்கும் ஆ
போல-நொருக்கும் விதம்போல,-திகத்த பூபதி-திரிகர்த்த தேசத்தரசனது,
தேரினை-, வேறு ஒரு தேரால்-, தகர்த்து - நொருக்கி, அவன் தனைஉம் -
அத்திரிகர்த்தனையும், வில்லொடுஉம் - வில்லுடனே, அகப்படுத்தினன் -
அகப்படச்செய்தான் [வில்லுங்கையுமாய்த் திரிகர்த்தனைப் பிடித்துக்கொண்டா
னென்றபடி];

     வீமனுக்கு வாயுவும், தேர்க்கு மலையும் உவமை.  தந்தையே
மைந்தனாகின்றா னென்னும் வேதவழக்குப்பற்றி வீமனுக்கு வாயுவை உவமை
கூறினார்.  "தந்தையரொப்பர்மக்கள்" என்றார் தொல்காப்பியனாரும்.
கற்பாந்தகாலத்திற் பெருங்காற்று எழுந்து வீசி உலகங்களை யழிக்கு
மென்க.(176)

18.-பலாயனன் விராடனைமீட்டு அவனது தேர்க்காலில்
திரிகர்த்தனைக் கட்டுதல்.

வீரியந்தனக்கொருவனாம்விராடனையொருபொன்
தேரிலேறுகென்றேற்றியத்தேரினிற்றிகத்தன்
சோரிபாய்தடந்தோள்களைவடத்தினாற்றுவக்கி
மூரியேறெனமீண்டனன்முறிந்ததச்சேனை.

      (இ -ள்.) (இவ்வாறு அகப்படுத்தி),-வீரியந்தனக்கு ஒருவன் ஆம்
விராடனை - வீரத்தன்மையில் ஒப்பில்லாதவனாகிய விராடராஜனை, ஒரு
பொன் தேரில் ஏறுக என்று - 'பொன்மயமான வேறொரு தேரிலே ஏறுவாயாக'
என்று சொல்லி, ஏற்றி - (கட்டவிழ்த்து) ஏறவிட்டு,-அ தேரினில் -
அந்தத்தேரிலே, திகத்தன்-திரிகர்த்தராசனது, சோரி பாய் தடதோள்களை -
இரத்தம் பெருகுகின்ற பெரிய புஜங்களை, வடத்தினால் துவக்கி - (விராடனைக்
கட்டிய) கயிற்றினாலேயே கட்டிவிட்டு,-மூரி ஏறு என - வலிமையுள்ள
விருஷபம் போல [கம்பீரமாக], மீண்டனன் - (பலாயனன்) திரும்பி வந்தான்;
(இதுசெய்யவே),-அ சேனை - அந்தத்திரிகர்த்தசேனை, முறிந்தது - அழிந்து
போயிற்று; (எ -று.)-ஏறுகென்று வியங்கோளீற்று அகரம் தொகுத்தல்.  (177)

19.-விராடன் பலாயனனுக்குநன்றியறிவு கூறல்.

பொருமுகத்தினிற்பகைவனைப்புயமுறப்பிணித்து
வெருமுகத்தினில்வீடுகொள்வீமனை விராடன்
செருமுகத்தினிலெனக்குநீசெய்தபேருதவிக்கு
ஒருமுகத்தினுமில்லைகைம்மாறெனவுரைத்தான்.

      (இ -ள்.) (இவ்வாறு), பொரு முகத்தினில் - போர்செய்கின்ற களத்திலே,
பகைவனை - பகைவனாகிய திரிகர்த்தனை, புயம் உற பிணித்து -
தோள்களை  அழுந்தக் கட்டிவிட்டு, வெரு முகத்தினில் - (யாவரும்)
அஞ்சத்தக்க தோற்றத்துடனே, வீடு கொள் - திரும்பிவருகின்ற, வீமனை -
வீமசேனனை நோக்கி, விராடன்-, 'செரு