பூமிமுழுவதிலுந் தேடிக்காணாது பாதாளத்திற்குப் போகும்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில் வடகிழக்குப் பக்கத்தில் தோண்டிச்சென்ற பெரும்பள்ளம், பின்பு கங்கை முதலியவற்றின் நீரினால் நிறைந்து ஸாகரமென்னும் பெயர் பெற்றுக் கடலோடு கூடித் தானும் கடலின்பாற்பட்டது என்பதாம். (" நூறுயோசனை யகலமுமாழமுநுடங்கக், கூறுசெய்தன ரென்பரால் வடகுணதிசையின்," "சகரர் தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகரவாரிதி சிறந்தது" என்பன, கம்பராமாயணம்.) (183) 25. | வளையநாடெலாமன்னவன்வரூதினிபரப்பி விளையுநன்பெருவிளைவெலாம் வெங்கனல்கொளுத்தி அளையுமாமணியானிரைகவர்தலுமாயர் உளையவோடிவந்தூர்புகுந்துத்தரற்குரைப்பார். |
(இ -ள்.) மன்னவன் - துரியோதனன்,-நாடு எலாம் வளைய - மச்சதேசம் முழுவதுஞ் சூழும்படி, வரூதினி பரப்பி -(தன்) சேனையைப் பரவச்செய்து,-விளையும் நல் பெரு விளைவு எலாம்-விளைகின்ற நல்ல பெரிய நெற்பயிர் முதலிய விளைச்சல்களையெல்லாம், வெம் கனல் கொளுத்தி - வெவ்விய நெருப்பினாற் சுட்டெரித்து,- அளையும் மா மணி - அசைந்தொலிக்கின்ற பெரிய மணிகளையுடைய, ஆன் நிரை - பசுக்கூட்டத்தை, கவர்தலும் - கொள்ளைகொண்டு சென்றவளவில்,- ஆயர்-(அப்பசுக்களைக் காத்துநின்ற) இடையர்கள், உளைய - வருத்த முண்டாக, ஓடிவந்து-, ஊர் புகுந்து-விராட நகரத்தினுட்சேர்ந்து, உத்தரற்கு - உத்தரகுமாரனுக்கு, உரைப்பார் - செய்தி சொல்லுபவரானார்கள்; (எ - று.)-அதனை, அடுத்த இரண்டுகவிகளிற் கூறுகின்றார். துரியோதனன் தன் சேனையை விராடநகரின் வடதிசை முழுவதும் பரப்பி, விளைச்சலைச் சுட்டெரித்து ஆனிரையைக் கவர்ந்தானாக, அச்செய்தியை நகரிலிருந்த உத்தரகுமாரனுக்கு ஆயர்தெரிவித்தனரென்க. உத்தரன் - விரடனது இளையமகன்; (மூத்தமகன்பெயர், சுவேதன்), 'எல்லாம்' என்னும் பெயர்- 'நாடெலாம்' என்பதில் "மேனியெல்லாம் பசலையாயிற்று" என்பதிற்போல ஒருபொருளின் பல இடங்குறித்தும், 'விளைவெலாம்' என்பதில்பொருளின் பன்மைகுறித்தும் நின்றது. (184) 26.-இதுவும், அடுத்தகவியும் -இடையர் உத்தரனுக்குச் செய்தி கூறல். குடநிறைப்பனகுவிமுலைக்கோநிரைமீட்பான் திடனுடைப்புயமன்னவன்றென்றிசைச்சென்றான் வடதிசைப்புலமுழுவதுமாசுணக்கொடியோன் அடல்வயப்படையாழியிற்பரந்ததையன்றே. |
(இ -ள்.) திடன் உடை புயம் மன்னவன் - வலிமையுள்ள தோள்களை யுடைய (நமது) அரசன் [விராடன்], குடம் நிறைப்பன குவிமுலை |