வித்தரம்பெருதேர்விடும்விசயனுக்கிவளென்று அத்தரம்பெறுபேடியைக்காட்டினளன்றே. |
(இ -ள்.) உத்தரன் புகல் உறுதி கேட்டு - (இவ்வாறு) உத்தரகுமாரன் சொன்ன உறுதிமொழியைக் கேட்டு,- ஒப்பனைக்கு உரியாள் - (சுதேட்டிணைக்குப் பலவகை) அலங்காரமுஞ் செய்தற்கு உரியவளாகிய (விரதசாரணி யென்னும் பெயர்பூண்ட) திரௌபதி,- கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை - திரண்ட அரமென்கிற வாள்விசேடத்தால் அராவப்பட்ட கூர்மையுள்ள வேலாயுதத்தையுடைய உத்தரகுமாரனை, குறுகி - சமீபித்து,- 'இவள்-, விசயனுக்கு - அருச்சுனனுக்கு, வித்தரம் பெரு தேர் விடும் - பரப்பமைந்த தேரைச் செலுத்துவாள்', என்று - என்று சொல்லி,- அ தரம் பெறு பேடியை - அப்படிப்பட்ட வல்லமையைப்பெற்ற பிருகந்நளையை, காட்டினள்-காண்பித்தாள்; (எ - று.)-அன்றே - ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம். உறுதி- உறுதியை வெளியிடுகின்றமொழிக்கு காரியவாகுபெயர், கொத்தரம் பொரு கூரயில் - "வாளரந் துடைத்த வை வேல்" என்றார்சிந்தாமணியாரும். பெண்ணுறுப்புமிக்கிருத்தலால், 'இவள்' எனப் பெண்பாலாற் கூறினர். "பெண்மைவிட்டாணவாவுவ பேடாண்பால், ஆண்மைவிட்டல்லதவாவுவபெண்பால், இருமையுமஃறிணையன்ன வுமாகும்" என்ற நன்னூற்சூத்திரங் காண்க. 'பேடி-பெண்ணியல்புமிக்கு ஆணியல்பு முடையவள்' என்பது, திருக்குறள் பரிமேலழகருரை. விசயன் - விஜயன் என்னும் வடமொழியின் திரிபு; இதற்கு - விசேஷமான வெற்றியை யுடையவனென்றுபொருள். இராஜசூயயாகத்திற்காக வடக்கிற்சென்று பல அரசர்களை வென்றதனாலும், காண்டவதகநகாலத்துத் தேவர்களைச் சயித்ததனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனை யெதிர்த்து விற்கழுந்தால் முடியிலடித்தனாலும், பின்பு இந்திராதி தேவர்க்கும் வெல்ல முடியாத நிவா தகவசர்காலகேயர்களை வதைத்ததனாலும், மற்றும் பல வெற்றிகளாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது. இனி, விஜயன்-(தன்னைச்) சயிப்பாரெவருமில்லாதவ னென்றும் பொருள் கொள்வர். இங்கு அருச்சுனனை 'விசயன்' என்ற பெயராற் குறித்தது - எப்பொழுதும் வெற்றியையே பெறுபவனான அவனுக்குத் தேர்செலுத்தி யுதவியவளாதலால், இவள் உடன்செல்லுதல் வெற்றியைவிளைக்கு மென்று குறிப்பதற்கு. (190) 32.-சுதேட்டிணையினிடம் வண்ணமகள் கூறியதைஉத்தரன்சொல்ல,சுதேட்டிணைபேடியைநோக்கி, நீதேரோட்ட நேர்ந்தால் உத்தரன் போர்வெல்வானெனல். என்றபோதவன்பயந்தவட்கியம்பியதுரைப்ப நின்றபேடியைநிரைவளைதழுவிநீநேரில் |
|