39.-பிருகந்நளைதேற்றவும் உத்தரன் தேறாது ஓடிவிடப் பார்த்தல். தூண்டுமாவிவைசொரிமதக்களிறிவைதுரங்கம் பூண்டதேரிவைபதாதிமற்றிவையெனப்புகல ஈண்டுநின்றவையாவையுமியாவெனத்தெரியா மீண்டுபோவதேயுறுதியென்றனனிகல்வீரன். |
(இ -ள்.) 'தூண்டும் மா இவை - செலுத்தப்படுகின்ற குதிரைகள் இவை: சொரி மதம் களிறு இவை - பொழிகின்ற மதசலத்தையுடைய யானைகள் இவை: துரங்கம் பூண்ட தேர் இவை - குதிரைகள் பூட்டிய தேர்கள் இவை: பதாதி இவை - காலாட்சேனைகள் இவை', என - என்று, புகல - (பேடி சதுரங்கசேனையைக்காட்டி எடுத்துச்) சொல்ல,-இகல் வீரன் - வலிய வீரத்தன்மையையுடையவனான உத்தரன், ஈண்டு நின்றவை யாவைஉம் - இங்குப் பொருந்தியவை யெல்லாவற்றையும், யா என - எவை [இன்னவை] யென்று, தெரியா - தெரிந்துகொள்ளாமல், 'மீண்டு போவதுஏ - திரும்பிச் சென்றுவிடுவதே, உறுதி - துணிவான காரியம்,' என்றனன் - என்று சொன்னான்; (எ - று.) இவன்படையின் தன்மை கண்டறியா னென்று, பேடி, குதிரை முதலியன இவைஇவை யெனச் சொல்லிக்காட்டினன்: காட்டவும் அச்சமிகுதியால் அச்சொல்லைச் செவியினாலேற்காமல், உத்தரன் இங்குநின்றால் உயிர்தப்புவது அரிது என்று கருதி மீண்டுபோவதே யுறுதியென்றான். உத்தரனை 'இகல் வீரன்' என்றது, இகழ்ச்சி. துரங்கம் - விரைவாய்ச் செல்வது என்று பொருள்படும் வடசொல். 'பதாதி' என்ற வடசொல்லுக்கு - கால்களினாலே நடந்து செல்பவனென்பது பொருள்: இங்கு 'பதாதி' என்றது - காலாள்களின் கூட்டத்தை யுணர்த்தி அஃறிணையின்பாற் பட்டதனால், 'பதாதி யிவை' எனப்பட்டது. மற்று - அசை. (198) 40.-பிருகந்நளை உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து, 'யான் பொருது பகைவெல்வேன்' எனல். வெயர்த்தமேனியைநறும்பனிநீரினால்விளக்கி அயர்த்துநீமுதுகிடாதொழியிமைப்பொழுதையா உயர்த்தபல்கொடிப்பகைஞரைத் தனித்தனியோட்டிப் பெயர்த்துநல்குவேனிரையுமென்றுரைத்தனள்பேடி. |
(இ -ள்.) (பின்பு), பேடி-,-வெயர்த்த மேனியை-(அச்சத்தினால்) வேர்வையடைந்த (உத்தரனது) உடம்பை, நறும் பனி நீரினால் விளக்கி - வாசனைவீசுகின்ற பனிநீரைத் தெளித்துத் துடைத்து (அயர்ச்சியைப்போக்கி)த் தேற்றி,(அவனை நோக்கி), 'ஐயா - தலைவனே! நீ -, இமைபொழுது - ஒருக்ஷணகாலம், அயர்த்து முதுகு இடாது ஒழி - தளர்ந்து முதுகு கொடுத்து ஓடாமலிரு; (நான்) உயர்த்த பல் கொடி பகைஞரை - உயர எடுத்த பலவகைத் |