பக்கம் எண் :

132பாரதம்விராட பருவம்

வந்து) அஞ்சியோடிய குமாரனும், இ தேர் விரைந்து ஊர்பவன் - (பேடியின்
செயலால் தேறி) இந்தத்தேரை விரைவாய்ச் செலுத்துஞ் சாரதியானான்,'
என்றும்-, 'பேடி-, நாம் முதல் ஐயுறும் பெருந்தகை - நாம் முதலிற்
சந்தேகிக்கத்தக்க பெருமைக்குணங்களையுடைய அருச்சுனனாம்,' என்றும்-,
நாடினார் - ஆலோசிப்பவரானார்கள்; (எ - று.)

     ஓடினவன் பேடியினால் தேற்றப்பட்டுத் தேரூரும் பாகனாக, பேடி
இப்போது ரதிகனாக ஆய்விட்டதனால், இப்பேடி அருச்சுனனாக
இருக்கவேண்டு மென்ற ஓராலோசனை துரோணாசாரியர்முதலியோருக்கு
உண்டாயிற்றென்பதாம்.  ஓடினானும், உம்மை - இழிவுசிறப்பு.  ஐயுறு -
ஐயமுறு: விகாரம்; காமுறு, ஏமுறு என்பனபோல.  பெருந்தகை -
அன்மொழித்தொகை: தகை - தகுதி, சற்குணம்.  நந்தியாவர்த்தம் - ஒரு
பூஞ்செடி; இதனை, இக்காலத்து நஞ்சாவட்டையென்பர்:  இம்மாலை,
துரியோதனனுக்கு உரிய அடையாளப்பூமாலையாம்.

     துரோணன் - பரத்துவாசமுனிவனது குமாரன்; கிருபாசாரியனுடன்
பிறந்தவளான கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை;
ஸகலசாஸ்திரங்களையும் தன் பிதாவினிடம் கற்று, படைத்தொழிலைப்
பரசுராமனிடத்து ஏழுநாளிற்பயின்றவன்: துரியோனாதியர் நூற்றுவர்க்கும்
பாண்டவரைவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன்:
வைதிகவிரதாநுட்டானஞ் செய்து கொண்டிருக்கையில்
தேவர்களாலேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட
பரத்துவாசமுனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற் பிறந்தமைபற்றி,
இவனுக்குத் துரோணனென்று பெயர்; த்ரோணகும்பம் - பதக்களவுகொண்ட
பாத்திரம்;  துரோணம் - பதக்கு, இரண்டுகுறுணி.  இனி, துரோணம் என்று
வில்லுக்குப் பெயரிருத்தலால், துரோணனென்பது - வில்வன்மைபற்றிவந்த
பெயருமாம்.  இவன், அங்கி வேசமுனிவன் பக்கலிலும் படைகள் தேர்ந்தான்.
ஏ - உயர்வு சிறப்பு.                                          (206)

48.-பிருகந்நளை கையில்வில்லேந்தி, உத்தரனை அஞ்சாது
தேர் செலுத்தச் சொல்லுதல்.

பேடியன்றுதன்பெண்மையையாண்மையாய்ப்பிறர்கொண்
டாடவந்தவெஞ்சாபமுந்தொடிக்கையிலாக்கிக்
கோடியம்புகளோரொருதொடையினிற்கோத்து
வீடுவிப்பனீயஞ்சிடாவிடுகதேரென்றான்.

      (இ -ள்.) அன்று - அப்பொழுது, பேடி - பேடிவடிவமமைந்த
அருச்சுனன், பிறர் - அயலார் [பகைவர்], தன் பெண்மையை - தனது
மிக்கிருக்கும் பெண்தன்மையை, ஆண்மைஆய் கொண்டாட -
ஆண்தன்மையாக மெச்சும்படி, அந்த வெம்சாபம் உம் - அந்தக்கொடிய
வில்லையும், தொடி கையில் ஆக்கி - வளையலணிந்த தன்