முடியில்அடித்தனன். பிறகு சிவபெருமான், தனது நிஜரூபத்துடனே அருச்சுனனுக்குத் தரிசனந்தந்து, வில் பாசுபதாஸ்திரம் அம்பறாத்தூணி முதலியவற்றைக் கொடுத்தருளினான். பின்பு அருச்சுனன் அங்கு வந்து தன்னை அழைத்துச்சென்ற தந்தையான இந்திரனுடனே தேவலோகஞ்சேர்ந்து, அங்குத் தேவர்கள் வேண்டியபடி அவர்கட்குப் பகைவராய்ப் பலநாளாகப் பெருந்துன்பமியற்றி வந்த கடலிடையிலுள்ள தோயமாபுரத்தில் வசிப்பவர்களான நிவாதகவசரென்னும் அசுரர் மூன்றுகோடி பேரையும், அந்தரத்திலுள்ள இரணியபுரத்தில் வசிப்பவர்களான காலகேயரென்னும் அசுரர் அறுபதினாயிரவரையும் ஆங்காங்குச்சென்று போர்செய்து அழித்திட்டனன் என்ற ஆரணிய காண்டவரலாறு இங்கு அறியவேண்டிய வரலாறு. அன்றுபோல் அலன் - சூதாடிச் செல்வமிழந்து சென்ற அந்நாளிலிருந்ததுபோலல்ல னென்றபடி. 'புரி' - புரிந்து; விகுதி முதலியன கெட்டுப் பகுதிமாத்திரமாய் நின்ற இறந்தகால வினையெச்சம். இனி, அருச்சுனன் தவத்திலிருக்கும்போதே சிவவேடனோடு போர்செய்தனனாதலால், போர்புரி தவம் - போர்செய்து இயற்றிய தவமெனினுமாம். 'ஆக' என்றது - நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு. அம்பிகாபதி - பார்வதியின் கணவன். தவத்தினால் அம்பிகாபதிபால் துன்று போர்புரி சுடுகணை பல பெற்று என்றும் இயைக்கலாம்; துன்று போர்புரிசுடுகணை - மிக்கபோரைச்செய்தற்கு உரிய கொடிய ஆயுதங்களென்க; கணை - இங்கே,, ஆயுதமென்னும்மாத்திரமாய் நின்றது; அவை - பாசுபதம், வில், அம்பறாத்தூணி முதலியன. அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றபொழுதே பயன்கொள்ளுதல் அருமையாதலால், 'அன்று' என்றார். அருச்சுனன் = அர்ஜ்ஜு நன்: இவ்வடசொல்லுக்கு - வெண்ணிறமுடையவ னென்பது, பொருள். இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய மகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு அவனைப் போன்ற சௌரியதைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது: இது, உவமவாகுபெயரின்பாற்படும்: பார்த்தன் கருநிறமுடையவனாதலால், அவனுக்கு அருச்சுனனென்ற பெயர் நிறம்பற்றிவந்ததென்றல் பொருந்தாது; மேல் 59 - ஆங் கவியையும் நோக்குக. போனகம் = போஜநம். பொன்தரு ஐந்து - ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கல்பகம், அரிசந்தநம் என்பன. (209) 51. | தன்னிலத்தினிற்குறுமுயல்தந்தியின்வலிதென்று இந்நிலத்தினிற்பழமொழியறிதிநீயிறைவ எந்நிலத்தினுமுனக்கெளிதாயினுமிவர்நந் நன்னிலத்தினில்வரவமர்தொடங்குதனன்றால். |
(இ -ள்.) (மற்றும்), இறைவ - அரசனே!-"தன் நிலத்தினில் - தான் இருக்குமிடத்திலுள்ள, குறுமுயல் - சிறிய முயற்குட்டி, தந்தியின் வலிது - (தன்னிடம் விட்டுப் பெயர்ந்துவந்த பெரிய) |