பேடியை - மிக்கவலிமையையுடைய பெரிய பேடியை, தேர்மிசை கண்டு- தேரின்மேற்பார்த்து, மிண்டுவீர்-நெருக்கிப் போர்செய்வீர்,' என கூறி-என்றுஞ் சொல்லி,- மீண்டான்-(போர்க்களத்துக்குத்) திரும்பினான்; (எ - று.) 'தானும்' என்றது, கர்ணனைப்போலவே இந்தத் துரியோதனனும் மனநிலைகொண்டு கூறினானென்பதைப் புலப்படுத்தும். போக, நிற்க - வியங்கோள் முற்று. போக என்பதைச் செயவெனெச்சமாகக் கொள்ளினுமாம். அனைவரும் = அனைவீரும்: முன்னிலையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி. நிற்கென - அகரம் தொகுத்தல். (213) 55.-அருச்சுனன் வடபுறத்து நிரைமீட்டல். மானமாமுடிமன்னரை விலக்கிவல்விரைந்து கோநிரைக்குலங்கொண்டுபோங் கோநிரைதுரந்து போனபேடிவெம்பூசலும் பொழுதுறப்பொருது தூநிறத்திளங்கன்றுடைத் தொறுக்களுமீட்டான். |
(இ - ள்.) (பின்பு), - போன பேடி - (போர்க்குச்) சென்ற பேடியாகிய அருச்சுனன்,-மானம் மா முடி மன்னரை - மானமுள்ளவர்களும் பெரிய கிரீடந்தரித்தவர்களுமான பகையரசர்களை, விலக்கி - விலகச்செய்து,- வல்விரைந்து - மிகவும் விரைவாக, குலம் கோ நிரை கொண்டுபோம் - சிறந்த பசுக்கூட்டங்களைக் கவர்ந்துபோகின்ற, கோ நிரை - ராஜபரிவாரத்தை, துரந்து - துரத்திக்கொண்டுபோய்,- வெம் பூசல்உம் - கொடிய போரையும், பொழுது உற - உரியகாலம் பொருந்த, பொருது - செய்து,- தூ நிறத்து-பரிசுத்தமான தன்மையுள்ள, இளங் கன்று உடை தொறுக்கள் உம் - சிறுகன்றுகளையுடைய பசுக்கூட்டங்களையும், மீட்டான் - திருப்பிக்கொண்டுவந்தான்; (எ - று.) கீழ் 20 - ஆஞ் செய்யுள்போலவே, இச்செய்யுளும்-வடபுறத்து நிரைமீட்சி கூறினமையின், இச்சருக்கத்துக்குஉயிர்நிலைச்செய்யுளாம்.
போரில் மிண்டிய வீடுமன் துரோணன் முதலியவர்களையெல்லாம் விலகச்செய்து பசுநிரையைக் காத்திருந்த அரசவர்க்கத்தையும் விரைவில் வென்று பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டுவந்தனன், அருச்சுனனாகிய பிருகந்நளை யென்க. பொழுதுற - சொற்ப காலத்திலென்றபடி: இனி, பொழுது உற - அஜ்ஜாதவாசவருஷங்கழிதற்குக் குறைவாய்நின்ற நான்கு நாழிகைப்பொழுது கழியுமளவுமென்றும், பொழுதுவிடியுமளவு மென்றும் உரைப்பாருமுளர். 'மானமா முடி மன்னர்' என்றது - "மயிர் நீப்பின் வாழாக் கவரிமாவன்னா, ருயிர்நீப்பர் மானம் வரின்" என்றபடி தம் தலையைக்கொடுத்தாயினும் மானத்தைக் காக்கவல்ல வீர ரென்றவாறுமாம். மானமாவது - எப்பொழுதும் தம்நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால் தாழ்வு வந்த விடத்து உயிர்வாழாமையுமாம். இனி, மானம் - செருக்கும், தமது அரசனிடத்து அபிமானமும், பெருமையும் |